2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. தொடக்க விழாவில் சிக்சர் அடிக்கும் போட்டி நடந்தது. இதில் இந்திய அணியின் முன்னாள் காப்டனாக இருந்த டோனி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பவுலிங் எந்திரம் மூலம் தலா 3 முறை பந்துகள் வீசப்பட்டது. இதில் டோனி 3 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஹைடன், பத்ரிநாத், அனிருதா தலா 2 சிக்சர் அடித்தனர். எல்.பாலாஜி ஒரு சிக்சர் அடித்தார். மொகித் சர்மா, பவான் நெகி, கணபதி ஆகியோர் சிக்சர் அடிக்கவில்லை. 


இந்த விளையாடிற்கு பின்னர் டோனி கூறியதாவது:-


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரு ஆண்டுக்கு முன்பு சேப்பாக்கத்தில் விளையாடினேன். மீண்டும் இங்கு பேட்டிங் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் திரும்பி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சென்னை அணி 2 ஆண்டாக விளையாடவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவும், எண்ணிக்கையும் குறையவில்லை.


சென்னை எனக்கு 2-வது தாய் வீடு ஆகும். சென்னையில் தான் எனது டெஸ்ட் அறிமுகம் நடந்தது.


தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி இளம் வீரர்களுக்கு சிறந்த அடித்தளமாகும். இதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார்.