TNPL 2021: கோவை vs திண்டுக்கல்; 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் வெற்றி
முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3வது லீக் போட்டிகள் நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் (TNPL 2021) லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.
ALSO READ | TNPL 2021: திருப்பூர் vs சேலம்; சேலம் அணி அசத்தல் வெற்றி
இதில் தொடக்க ஆட்டகாரர் சுரேஷ்குமார் 58 ரன்னில் அவுட்டானார். பின்னர் நன்கு விளையாடி வந்த இந்த அணி முதல் விக்கெட்டுக்கு கங்கா ஸ்ரீதர் ராஜு ஜோடி 108 ரன்கள் சேர்த்தது. கங்கா ஸ்ரீதர் ராஜா 57 பந்துகளில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 90 ரன்கள் எடுத்தும், சாய் சுதன் 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஹரி நிஷாந்துடன் விக்கெட் கீப்பர் மணிபாரதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தனர். அடுத்து இறங்கிய விவேக் டக் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹரி நிஷாந்த் 37 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 70 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகன் விருது மணிபாரதிக்கு அளிக்கப்பட்டது.
ALSO READ | TNPL 2021: நெல்லை vs திருச்சி; முதல் வெற்றியை பதிவு செய்தது திருச்சி அணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR