Tokyo Olympics: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு CSK 1 கோடி ரூபாய் பரிசு
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி இந்தியாவின் தங்க நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு 1 கோடி ரூபாய் பரிசு அளித்து பாராட்டுகிறது.
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி இந்தியாவின் தங்க நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு 1 கோடி ரூபாய் பரிசு அளித்து பாராட்டுகிறது.
இந்தியாவிற்கு தடகளத்தில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ரா. டோக்கியோ 2020 மேடையில் இன்று இந்தியாவுக்கு பொன்னான நாள். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா பொன்னை ஈட்டிய நாள்.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் நேரத்தில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்து ஒரு உத்வேகம் கிடைத்துள்ளது.
Also Read | ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து!
இந்த சிறப்பான வரலாற்று சாதனையை நினைவுகூரும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் ரசிகர்கள் சார்பாக, தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மற்றும் கொண்டாடப்படும் விளையாட்டு அணியான சிஎஸ்கே மற்றும் லெப்டினன்ட் கர்னல் எம்.எஸ்.தோனி ஆகியோர் இந்திய ராணுவத்தில் இளைய அதிகாரியான நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
நீரஜ் சோப்ராவின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் சி.எஸ்.கே, 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 8758 என்ற எண்ணுடன் ஒரு சிறப்பு ஜெர்சியை உருவாக்கவிருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே செய்தித் தொடர்பாளர், "டோக்கியோ 2020 இல் நீரஜ் சோப்ராவின் முயற்சியால் இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம். இந்த வெற்றி, எதிர்காலத்தில், கோடிக்கணக்கான இந்தியர்கள் விளையாட்டில் ஈடுபட ஊக்கமளிப்பதாக இருக்கும். எந்த ஒரு விளையாட்டுத் துறையிலும் உயர் மட்டத்தில் போட்டியிட்டு சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார் நீரஜ் சோப்ரா. முடியும். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அவர் 87.58 மீட்டர் தூரத்தை எறிந்து ஒட்டுமொத்த தேசத்தையும் ஈர்த்தார்.
எனவே நீரஜ் சோப்ராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 8758 என்ற எண்ணுடன் ஒரு சிறப்பு ஜெர்சியை சிஎஸ்கே உருவாக்கும்” என்று தெரிவித்தார்.
அபினவ் பிந்த்ராவுக்கு அடுத்தபடியாக, நீரஜ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறும் இரண்டாவது தனிநபர் ஆவார். எதிர் வரும் ஆண்டுகளில் இந்த பட்டியலில் மேலும் பலர் சேர்வார்கள் என்று நம்புகிறோம்.
Also Read | Tokyo Olympics: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR