Tokyo Olympics: வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி
இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
டோக்கியோ: இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் போட்டியிட்ட இந்திய மகளிர் அணி, அபாரமாக ஆடி மிகச்சிறந்த அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
குர்ஜீத் ஒரு அற்புதமான கோலை அடித்தார்
குர்ஜித் கவுர் இந்தியாவின் தரப்பில் இருந்து அடிக்கப்பட்ட ஒரே கோலை அடித்தார். வலிமையான அணியாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் முழுவதும் மிகவும் சிரமப்பட்டும் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய (Australia) அணியால் இந்திய தாக்குதலை முறியட்டித்து ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ALSO READ: Tokyo Olympics: பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்
ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி குர்ஜித் கவுரின் 22-ஆவது நிமிட ஸ்டிரைக்கின் காரணமாக காலிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் உலக நம்பர் 2 அணியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதற்கு முன்னர் 1980 ஒலிம்பிக் போட்டிகளில் ஆறு அணிகளுடன் ரவுண்ட் ராபின் போட்டியில் நான்காவது இடத்தை இந்திய அணி பிடித்தது. இதுதான் இதுவரையிலான இந்திய அணியின் மிகச்சிறந்த ஆட்டமாக இருந்து வந்துள்ளது.
49 வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணி நேற்று ஒலிம்பிக் (Olympic Games) அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணியும் இன்று அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி களமிறங்கிய போது, இந்திய அணி வெற்றி பெறும் என யாரும் நம்பவில்லை. உலக தர வரிசையில், இந்திய ஹாக்கி மகளிர் அணி 9 ஆவது இடத்திலும் ஆஸ்திரேலியாவின் ஹாக்கி மகளிர் அணி 2 ஆவது இடத்திலும் உள்ளன.
எனினும் தங்கள் அபார மன உறுதியால் இந்திய சிங்கப் பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
ALSO READ: Tokyo Olympics: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி; லாவ்லீனாவின் அசத்தல் வெற்றி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR