இந்தியா - இலங்கைக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி நாளை நண்பகல் 2:30 மணியளவில் கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி தரப்பில் ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விராத் கோலி(c), லோகேஷ் ராகுல், கெதர் ஜாதவ், டோனி(wk), பாண்டியா, ஆக்ஸார் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூமார, யூசுவெந்திர சஹால், மனிஷ் பாண்டே, அஜிங்கியா ரஹானே, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.


இலங்கை அணி தரப்பில் நீரோஷ் டிக்வெல்ல (w), லஹிரு தமீமான், குசன்ஸ் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், மிலிந்த சிரிரிவந்தனா, அகிலா டான்ஜாயா, திசர பெரேரா, துஷ்மந்த சேமேரா, லசித் மலிங்கா (சி), விஷ்வ பெர்னாண்டோ, டனுஷ்கா குணதிலக, மாலிந்த புஷ்பகுமார, லக்ஷண் சந்தாகன், வனிது ஹசரங்கா, தில்ஷன் முனவீரா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் களமிறங்குகின்றனர்.


முன்னதாக இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது இந்தியா. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.


எனவே நாளை நடைபெறும் இப்போட்டி இலங்கைக்கான ஆறுதல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மட்டுமே என்பதில் குழப்பம் இல்லை.