டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய 4 வங்கதேச பந்துவீச்சாளர்கள்
வங்கதேச கிரிக்கெட்அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி இந்த தொடர் மூலம் திரும்புகிறது. வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அணியின் சொந்த மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கிளீன் ஸ்வீப் செய்த தெம்புடன் இந்தியாவுக்கு வருகிறது. அதே உத்வேகத்துடன் இந்தியாவையும் அந்த அணி எதிர்கொள்ள இருக்கும் நிலையில், இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச அணியின் பவுலர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
1. ஷகிப் அல் ஹசன்
சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலை எடுக்கும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதில் முன்னணியில் இருப்பவர் நட்சத்திர ஆல்ரவுண்டரும், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷகிப் அல் ஹசன், இந்தியாவுக்கு எதிரான 8 டெஸ்ட் போட்டிகளில் 37.95 சராசரியுடன் அதிகபட்சமாக 21 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
2. முகமது ரபீக்
இரண்டாவது இடத்தில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் முகமது ரபிக். இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் 45.71 சராசரியுடன் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்-ரவுண்டர் மெஹ்தி ஹசன் மிராஜ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
3. ஷஹாதத் ஹுசைன்
3 போட்டிகளில் 26.75 சராசரியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹுசைனும் இந்தப் பட்டியலில் உள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் சுழற்பந்து வீச்சாளர்களை விட சிறந்த சராசரியைக் கொண்டிருப்பது சுவாரஸ்யமான விஷயம். இதற்குப் பிறகு, தைஜுல் இஸ்லாம் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார், அவர் 6 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், ஆனால் அவரது சராசரி 63.50 ஆக உள்ளது.
4. மஷ்ரஃப் மோர்டாசா
பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான மஷ்ரஃப் மோர்டாசா இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகளில் 38 சராசரியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக வங்கதேசத்தின் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும் அளவுக்கெல்லாம் இருந்ததில்லை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களோ அல்லது வேகப்பந்து வீச்சாளர்களோ யாரும் இந்தியாவுக்கு எதிராக அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ஷகிப் அல் ஹசன் எனும் ஆபத்து
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் இப்போது இருக்கும் பிளேயர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்றால் அது ஷகிப் அல் ஹசன் தான். அவர் 69 டெஸ்ட் போட்டிகளில் 31.31 சராசரியுடன் 242 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், ஷாகிப் தற்போது பார்மில் இல்லை. அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட உள்ளார். இந்தியாவில் விளையாடிய அனுபவம் நிறைய இருப்பதால், இந்த டெஸ்டில் அவர் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் வங்கதேசம் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் ஜாகீர்கான் முதலிடத்தில் உள்ளார். அவர் 7 போட்டிகளில் 24.25 சராசரியில் 31 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பங்களாதேஷ் டெஸ்ட் அணி
நஸ்முல் ஹசன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன் மிராஜ், ஜாகர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹீத் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்மதுல் ஹசன் ஜாய், ஹசன் மற்றும் கலீத் அகமது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயாள்.
இந்தியா vs பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் அட்டவணை
முதல் டெஸ்ட் போட்டி - செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 23 வரை காலை 9.30 மணி, சென்னை
இரண்டாவது டெஸ்ட் போட்டி - 27 செப்டம்பர் முதல் அக்டோபர் 1 வரை, காலை 9.30 மணி, கான்பூர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ