நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை தனது மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை விடுவிக்க ஒப்புக்கொண்டதை உறுதிப்படுத்தியது. இதனால் போல்ட் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும், அதே நேரத்தில் உள்நாட்டு லீக்குகளிலும் விளையாட முடியும்.  33 வயதான வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு அவருக்கு கிடைத்துள்ளது.  நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இறுதியாக அவரது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டது.  இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"போல்ட் 317 டெஸ்ட் விக்கெட்டுகளையும், ODI அளவில் 169 விக்கெட்டுகளையும் மற்றும் T20 கிரிக்கெட்டில் 62 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார், சமீப காலமாக நியூசிலாந்து அணியுடன் குறைவான பங்கை கொண்டிருந்தார்.  போல்ட் விளையாட தயாராக இருக்கும் பட்சத்தில் அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு  கிடைக்கும்" என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.



மேலும் படிக்க | Asia Cup 2022: ஆசிய கோப்பை 2022க்கான இந்திய அணி அறிவிப்பு!


 


"இது எனக்கு மிகவும் கடினமான முடிவு மற்றும் இந்த நிலைக்கு வருவதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவது ஒரு குழந்தை பருவ கனவாக இருந்தது, என்னால் முடிந்த அனைத்தையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடந்த 12 ஆண்டுகளில் BLACKCAPS மூலம் பல சாதனைகள் புரிந்தேன்.  இந்த முடிவு எனது மனைவி கெர்ட் மற்றும் எங்கள் மூன்று மகன்களை பற்றியது. குடும்பம் எப்போதுமே எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்து வருகிறது, அதற்கு முதலிடம் கொடுப்பதிலும், கிரிக்கெட்டுக்குப் பிறகு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதிலும் நான் வசதியாக உணர்கிறேன்" என்று போல்ட் கூறினார்.



இந்த நடவடிக்கையானது நியூஸிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எனக்கு தெரியும்.  எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு இன்னும் பெரிய ஆசை உள்ளது, மேலும் சர்வதேச அளவில் வழங்குவதற்கான திறமை என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். இருப்பினும், தேசிய ஒப்பந்தம் இல்லாதது எனது தேர்வுக்கான வாய்ப்புகளை பாதிக்கும் என்ற உண்மையை நான் மதிக்கிறேன். மேலும் இந்த அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நேரம் சரியானது என்று நான் உணர்கிறேன்" என்று போல்ட் கூறினார்.


மேலும் படிக்க | முடிந்தது மேற்கிந்திய தீவுகள் தொடர்! மீண்டும் குழப்பத்தில் பிசிசிஐ!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ