தமிழுக்காக சபதம் செய்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தல தோனி
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் 12 வது சீசன் ஆரம்பிக்கும் முன்பே தமிழில் பேசக் கற்றுக்கொள்வேன் என சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தல தோனி கூறியுள்ளார்.
தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு போட்டி திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சியோசெம் மதுரை பேந்தர்ஸ் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விமானம் மூலம் திருநெல்வேலி வந்தார்.
அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அருவியை காண சென்றார். இதனை கேள்விப்பட்ட பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து மைதானத்திற்கு திரும்பிய தோனி, டாஸ் போடுவதில் கடந்துக்கொண்டார். இதில் கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்றது.
பின்னர் பேசிய தோனி, நெல்லை மண் எனக்கு முக்கியமானது. எப்படி என்றால், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி உருவாக காரணமகா இருந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தது என்பது தான். அதனால் தான் நெல்லை மண் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது.
அதேபோல தமிழ் மொழியை நான் கற்றுக்கொண்டு வருகிறேன். ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் தொடங்கும் போதும் சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்வேன். ஆனால் சீக்கிரமே மறந்து விடுகிறேன். ஆனால் இம்முறை அடுத்த ஐபிஎல் 12 வது சீசன் ஆரம்பிக்கும் முன்பே தமிழில் பேசக் கற்றுக்கொள்வேன் எனக் கூறினார்.