நியூடெல்லி: இந்தியாவுடனான ஆசியக் கோப்பை மோதலுக்கு மத்தியில் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட பாகிஸ்தானிடம் ஐசிசி உத்தரவாதம் கோருகிறது என்று கூறாப்படுகிறது. இதற்காக  ஐசிசி அதிகாரிகள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். ஆசிய கோப்பையை நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (Pakistan Cricket Board (PCB)) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India (BCCI) ) இடையேயான மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா தனது அண்டை நாடான பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ள செல்ல வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ICC ODI உலகக் கோப்பையில் இருந்து பின்வாங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை தெரிவித்துள்ளது.


 அதனையடுத்து, போட்டிக்கான கலப்பின மாதிரி தீர்வை (hybrid model) வழங்கியது, ஆனால் இந்தியா அதை நிராகரித்தது. இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அதிகாரிகள், ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான உத்தரவாதத்தை வாரியத்திடம் பெற பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். பிசிபியின் ஹைப்ரிட் மாடலுக்கு இந்தியா ஒப்புக்கொண்டால், பாகிஸ்தானும் ODI WC யில் அதைக் கேட்கலாம் என்பதால், ஐசிசி இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது.  


மேலும் படிக்க | WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இல்லையா?


ஐசிசி தலைவர் Greg Barclay மற்றும் CEO Geoff Allardice ஆகியோர் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் வாரியத்திடம் இருந்து உறுதிமொழி பெறுவதற்காக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளதாக PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


"ஐசிசி மற்றும் உலகக் கோப்பை நடத்துபவர்களான பிசிசிஐ, பாகிச்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழுவின் தலைவரான நஜாம் சேத்தியால், ஹைப்ரிட் மாடலை தவிர்க்கவேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளது. ஐசிசி நிகழ்வுக்கு முந்தைய ஆசியக் கோப்பைக்கு ஹைப்ரிட் மாடலை நஜாம் சேத்தி பரிந்துரைத்தாலும், அதே முறையை இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடும் போது உலகக் கோப்பை போட்டிகளிலும் அதை செயல்படுத்த ஐசிசியிடம் கேட்கலாம்" என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாக பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.


"ஐசிசியோ அல்லது பிசிசிஐயோ அத்தகைய சூழ்நிலையை விரும்பவில்லை, ஏனெனில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பான தெளிவு அவசியம்" என்று பிடிஐ தெரிவித்துள்ளது.


"ஐசிசி அதிகாரிகள் பிசிபி மற்றும் பிசிசிஐ இடையே ஒரு பாலமாக செயல்பட முயற்சி செய்கிறார்கள் மற்றும் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்பான நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கிறார்கள்," என்று தெரிகிறது.


மேலும் படிக்க | WTC Final: இஷானும் இல்லை... கேஎஸ் பாரத்தும் இல்லை; கீப்பருக்கு இவர் தான் சரி - மூத்த வீரர் தடாலடி!


இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை பந்தயங்கள், அந்நாட்டின் பொருளாதார சிக்கல்களின் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு மாற்றப்பட்டன. டி20 உலகக் கோப்பையும் இந்த ஆண்டில் நடைபெற உள்ளதால், ஆசியக் கோப்பையும் டி20 வடிவில் நடத்தப்படும். ஆசிய கோப்பை போட்டிகள் டி20 வடிவத்தில் நடப்பது இது இரண்டாவது முறையாகும்.


டி20 உலகத் தர வரிசையில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, பாகிஸ்தான், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 


மொத்தம் 14 முறை நடைபெற்றுள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.


மேலும் படிக்க | WTC Final 2023: இந்திய அணி தான் சாம்பியன் பாஸ்.. அவரே சொல்லிட்டார்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ