உமேஷ் யாதவ் தனது பேட்டிங் திறமைக்கு நன்கு அறியப்பட்டவர் அல்ல என்றபோதிலும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் அவர் அடித்த 31 ரன்கள், சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 10 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். மேலும் இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெற்ற அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 


மேலும், உமேஷ் யாதவ் தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன் எனும் பெருமை பெற்றார். உமேஷ் யாதவிற்கு முன்னதாக, இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மறைந்த மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன் ஃபோஃபி வில்லியம்ஸ் ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் இந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தனர். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இந்த சாதனையை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.


இத்துடன், டெஸ்ட் தொடர் வரலாற்றில் 30+ ரன்கள் எடுத்த வேகமான வீரர் என்ற பெருமையையும் உமேஷ் பெற்றார். 2004-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 11 பந்துகளில் 31* ரன்கள் எடுத்த ஸ்டீபன் ஃப்ளெமிங்கை உமேஷ் தற்போது மிஞ்சியுள்ளார். 


இப்பட்டியலில் இவர்களை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளின் நாம் மெக்லீனின் 12 பந்துகள் 31 (1998-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக), அப்துர் ரசாக்கின் 17 பந்துகள் 43 (2011-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக) மற்றும் ஆஸ்திரேலியாவின் WP ஹோவலின் 15 பந்துகளில் 35 ரன்கள் குவித்து முதல் ஐந்து இடங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். பந்வீச்சாளராக இருந்து பேட்டிங் வரிசையில் பல சாதனை படைத்த உமேஷ் யாதவை ரசிக்கர்கள் சமூக ஊடகங்களில் பாராட்டி வருகின்றனர்.