இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரராக இருப்பவர் உமேஷ் யாதவ். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியில் விளையாடிருந்த அவருக்கு இப்போது டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் கிடைத்து வருகிறது. அண்மையில் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு அழைக்கப்பட்டாலும், மீண்டும் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Ind vs NZ: மைதானத்திற்குள் ரோஹித் சர்மாவை கட்டிபிடித்த ரசிகர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்!


அவரை முன்னாள் நண்பர் ஒருவர் ஏமாற்றியிருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உமேஷ் யாதவின் மேலாளராக சைலேஷ் தாக்கரே இருந்துள்ளார். இவர் உமேஷ் யாதவின் வருவாய் மற்றும் செலவு கணக்குகளையும் முதலீடுகளையும் கவனித்து வந்துள்ளார். அவரிடம் நாக்பூரில் சொத்து ஒன்று வாங்குவதற்காக 44 லட்சம் ரூபாயை உமேஷ் யாதவ் கொடுத்துள்ளார். அந்த தொகையில் சைலேஷ் தாக்கரே உமேஷ் யாதவ் பெயரில் சொத்து வாங்காமல் தன்னுடைய பெயரில் சொத்தை பதிவு செய்துள்ளார்.



இது குறித்து தெரிந்து கொண்ட உமேஷ் யாதவ் அதிர்ச்சியடைந்து சைலேஷ் தாக்கரேவிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அந்த சொத்தை தான் சம்பாதித்து வாங்கியதாக தெரிவித்திருக்கிறார். பணம் திரும்ப கொடுக்குமாறு கேட்டதற்கும் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதால் இப்போது காவல்துறையை நாடியிருக்கிறார் உமேஷ் யாதவ். இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் புகாரில், சுமார் 44 லட்சம் ரூபாயை பெற்று தன்னுடைய பெயரில் சொத்து வாங்காமல் ஏமாற்றிய சைலேஷ் தாக்கரே மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பண விவகாரத்தில் வடிவேலு பாணியில் உற்ற நண்பனே பிரபல கிரிக்கெட் வீரரான உமேஷ் யாதவை ஏமாற்றியது பிரபலங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. 


மேலும் படிக்க | ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்... ஐசிசியின் புதிய பரிந்துரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ