இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஈடன் கார்சன் 11 ஓவர்கள் வீசினார். இதனால் நியூசிலாந்து அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இலங்கை - நியூசிலாந்து இடையிலான மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தவறான கணக்கீட்டின் காரணமாக ஒரு பெளலர் 11 ஓவர்களை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி
இலங்கை பெண்கள் vs நியூசிலாந்து மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது எண்ணும் பிழையில், நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஈடன் கார்சன் 50 ஓவர்கள் ஆட்டத்தில் 11 ஓவர்கள் வீசினார். இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.



இலங்கை அனிக்கு எதிராக 330 ரன்களை எடுத்தபோது, கார்சன் தனது 11 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.  


மேலும் படிக்க | 10000 பெண்களுடன் உடலுறவு கொண்டதாக தம்பட்டம் அடித்த விளையாட்டு வீரர் மீது வழக்கு


கார்சன் ஒரு கண்ணியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், மேலும் அவர் 45வது ஓவரில் 10 ஓவர்களை முடித்தார். இரண்டாவதாக ஆட களம் இறங்கிய இலங்கை அணி பேட்டிங் செய்துக் கொண்டிருந்தபோது ஆஃப்-ஸ்பின்னர் கார்சன், 47 வது ஓவரையும் வீசினார். அந்த ஓவரில் அவர் ஒரு ரன் மட்டுமே கொடுத்தாலும் விக்கெட் எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



11வது ஓவர் என்ற விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது மட்டுமல்ல, போட்டி நடுவர்களாலும் அம்பயார்களாலும் கவனிக்கப்படாமல் போனது. நியூசிலாந்து கேப்டன் உட்பட சக வீராங்களைகளும் கூட கார்சன் 10 ஓவர் வீசிவிட்டார் என்பதை கவனிக்கவில்லை.


போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் 11 ஓவர் வீசிய பெளலிங்கால் கார்சனும் சாதனை படைத்தார். 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களுக்கு மேல் வீசிய முதல் நியூசிலாந்து பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஈடன் கார்சன்.


மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா கேப்டனான பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத இளம் வீரர்


இப்போட்டியில், நியூசிலாந்து 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றன.


ஆல்-ரவுண்டர் அமெலியா கெர் மற்றும் கேப்டன் சோஃபி டெவின் ஆகியோரின் அபார சதங்களால் நியூசிலாந்து 329 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர், இலங்கை அணியின் கவிஷா தில்ஹாரி அதிகபட்சமாக மற்றும் அரை சதம் அடித்தார்.


நியூசிலாந்து ப்ளேயிங் XI அணி


சுசி பேட்ஸ், பெர்னாடின் பெசுய்டன்ஹவுட், மெலி கெர், சோஃபி டெவின், மேடி கிரீன், ஜார்ஜியா ப்ளிம்மர், ப்ரூக் ஹாலிடே, ஹன்னா ரோவ், லியா தஹுஹு, ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ்


இலங்கை அணி 


சாமரி அத்தபத்து, விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி (Wk), ஓஷதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, காவ்யா கவிந்தி, உதேஷிகா பிரபோதனி


மேலும் படிக்க | தேர்வுக்குழு தலைவராகவும் முன்னாள் இந்திய வீரர்... இனியாவது விடிவுகாலம் பிறக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ