சிறந்த கிரிக்கெட்டர் புஜாராவை சிறப்பாக வழியனுப்பி வைத்திருக்கலாமோ? WV ராமன் ஆதங்கம்
WV Raman On BCCI Decision: சிறந்த வீரருக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுக்கக்கூடாதா? புஜாராவை சிறப்பாக வழியனுப்பி வைத்திருக்கலாமோ? கேள்விக்கணைகளால் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் சீனியர் இந்திய கிரிக்கெட்டர்
இந்தியாவின் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வரவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆடவர் அணியை தேர்வுக் குழுவினர் அறிவித்த நிலையில், மூத்த கிரிக்கெட் வீர சேட்டேஷ்வர் புஜாரா அணியில் இடம்பெறவில்லை. சீனியர் பேட்டரான அவரை கைவிட முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவரும் சமூக இடத்தில் கடுமையாக விமர்சித்தனர்.
சேதேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு இந்த டெஸ்ட் அணியில் இடமில்லை, கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது, இந்திய டெஸ்ட் பேட்டிங் வரிசையில் மாற்றத்தின் சாத்தியமான தொடக்கமாக கருதப்படுகிறது. இதுகுறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன், புஜாராவை இப்படி வெளியேற்றிருக்க வேண்டியதில்லை என்றும், அவரை இன்னும் சற்று சிறப்பான முறையில் விடை கொடுக்க தகுதியானவர் என்று தெரிவித்தார்.
புஜாரா வெளியேற்றம் குறித்து டபிள்யூ.வி. ராமன்
"தேர்வுக்குழுவினர் சாத்தியமான நான்கு தொடக்க வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், அதில் முதல் பலியானது சேத்தேஸ்வர் புஜாரா. பிரச்சனை என்னவென்றால், இது மற்றொரு சர்ச்சைக்குரிய முடிவு. புஜாரா தலைசிறந்த ஒரு கிரிக்கெட் வீரர், அவர், இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய செய்துள்ளார், மேலும் அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெற்ற பல போட்டிகளில் இந்தியா வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்" என்று ராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கம்பீருக்கு பொறாமை... விராட் கோலியிடம் சண்டை குறித்து பாகிஸ்தான் வீரர் தடாலடி!
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ராவிடம் பேசும் அவரது கலந்துரையாடல், யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
"அவர் நல்ல ஆட்டக்காரர், சமீபத்தில் துணை-கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார், ஆனால் WTC இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார், இதனால் அவர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டது, பலருக்குப் பிடிக்காத ஒரு முடிவு என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
"சேத்தேஸ்வர் புஜாரா, சிறப்பாக வழியனுப்பத் தகுதியானவர். தற்போது, டெஸ்ட் போட்டியில் இருந்து புஜாராவை விலக்குவது சரியான முடிவு என்று தேர்வுக் குழுவினர் நினைத்தால், அவருக்கு ஒரு சிறந்த வெளியேற்றம் கொடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் சில நேரங்களில் விஷயங்கள் இப்படித்தான் நடக்கும், அதோடு, இது முதல் வழக்கு அல்ல. இதேபோல, பல சிறப்பான கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்” என்று ராமன் தெரிவித்துள்ளார்.
நன்றாக விளையாடியபோதும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டார். கே.எல்.ராகுலுக்காக அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன்பிறகும்கூட அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணியில் வருங்கால சூப்பர் ஸ்டாராக இருப்பார் என மயங்க் அகர்வால் கருதப்பட்ட நிலையில், தேர்வுக் குழுவினர் மயங்க் அகர்வாலின் வாழ்க்கையை முடிவை நோக்கி தள்ளியுள்ளனர். தற்போது கேஎல் ராகுலுக்கு பதிலாக ஷுப்மான் கில் வந்துவிட்டதால் மயங்க் அகர்வாலின் இந்திய டெஸ்ட் அணிக்கான கனவு ஏறக்குறைய முடிவை நோக்கி நகர்ந்துவிட்டதாக கருதப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.
மேலும் படிக்க | விராட் கோலியிடம் கோபத்தை காட்டிய தோனி... அதுவும் அவர் மொறைச்சா அவ்வளவு தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ