எம்எஸ் தோனி என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற மகேந்திரசிங் தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்எஸ் தோனியை தமிழ்நாடு ரசிகர்கள் செல்லமாக "தல" என அழைப்பது உண்டு. இவர் தலைமையில் சென்னை அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.


சூதாட்ட புகார் காரணமாக இரண்டு வருடம் விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை களம் கண்டுள்ளது. இதுவரை இந்த சீசனில் விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் புள்ளி பட்டியல் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தகது.


இந்த நிலையில், "தல தோனி" தூங்கிக் கொண்டு இருக்கும் போது, அவருக்கே தெரியமால் சென்னை அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஜடேஜா செல்பி எடுத்துள்ளார்.


தற்போது, இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


புகைப்படம்:-