IPL 2021 புதுமையான ஹேர் ஸ்டைல்: ஸ்டைலில் கலக்கும் தல தோனி
தோனியின் புதிய கலர் ஹேர் ஸ்டைல் மற்றும் கலக்கலான உடையில் வரும் ஐபிஎல் 2021 புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Dhoni தோனியின் புதிய கலர் ஹேர் ஸ்டைல் மற்றும் கலக்கலான உடையில் வரும் ஐபிஎல் 2021 புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்பின் பல வீரர்கள் கொரோனா தொற்று காரணமாக வெளியேறியதால் ஐபில் நிர்வாகமே போட்டிகளை தள்ளிவைத்தது. அதன்பின் தற்போது ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்கான பணிகளில் தற்போது பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் இறங்கியுள்ளது.
ALSO READ Beer விளம்பரத்தில் MS Dhoni: பிராண்ட் பெயரில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், ஜெர்சி எண் 7
இன்னிலையில் ரசிகர்களிடையே மீண்டும் ஐபிஎல் போட்டிக்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் ஐபிஎல் நிர்வாகம் புதிய புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் டோனியின் புதிய ஐபிஎல் ப்ரோமோ ஒன்று நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. கலரான ஹேர் ஸ்டைல், நட்சத்திரங்கள் பொருத்திய சட்டை, குறும்பான டோனி என ப்ரமோ முழுவதும் தோனியின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இருந்தன. 45 நொடிகள் இருக்கும் இந்த ப்ரோமோ 20 மணி நேரத்தில் 12 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது சிஎஸ்கே அணி ஐக்கிய அமீரகம் சென்றுள்ளது. ரெய்னா, தோனி போன்ற முக்கிய வீரர்கள் சிஎஸ்கே அணியுடன் புறப்பட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் சென்னையில் தோனி மற்றும் நடிகர் விஜய் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR