துபாய்: 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணம் அரையிறுதிக்கு முன்பே முடிந்தது. திங்களன்று, இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் நமீபியாவுக்கு எதிரானது, இதில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி விராட் கோலியின் டி20 கேப்டனாக இருக்கும் கடைசி போட்டியாகும். இது தவிர, இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் கடைசி போட்டியும் இதுதான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான்கரை ஆண்டுகள் ரவி சாஸ்திரி (Ravi Sashtri) இந்திய அணிக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து வெற்றிகளைக் குவிக்க உதவியுள்ளார், குறிப்பாக 2 ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகள், இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றி என்று டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய அணியை (Team India) வேர்ல்ட் பீட்டர்களாக உருவாக்கினார்.


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நேற்று வரை இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமித்துள்ளது.


ஒரு பயிற்சியாளராக இந்திய அணியிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் ரவி சாஸ்திரி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். ரவி சாஸ்திரி இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் வீரர்கள் முன்னிலையில் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த அணி தான் தலைசிறந்த அணி என ரவி சாஸ்திரி தெரிவித்தார். ஐசிசி கோப்பையை வெல்வதன் மூலம் இதை சிறப்பாக செய்திருக்க முடியும், ஆனால் இதுவே ஆட்டம், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று சாஸ்திரி கூறினார்.


டிரஸ்ஸிங் ரூமில் மேலும் பேசிய ரவி சாஸ்திரி, 'ஒரு அணியாக நான் எதிர்பார்த்ததை விட நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள். கடந்த சில வருடங்களில் உலகின் பல்வேறு மூலைகளுக்கும் சென்று வெற்றிகளை நாம் பதிவு செய்தோம். எல்லா வகையிலும் வெற்றி பெற்று அனைத்து அணிகளையும் வீழ்த்தினோம். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உங்களை ஒரு சிறந்த அணியாக மாற்றுகிறது. கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளில், இந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.


 



 


அடுத்த முறை சந்திக்கும் போது நீங்கள் அதிக புத்திசாலியாகவும் அனுபவசாலியாகவும் இருப்பீர்கள். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது நீங்கள் சாதிப்பது அல்ல, கஷ்டங்களை எப்படி சமாளிப்பது என்பதுதான் என்று அவர் கூறினார். 


அவரது இந்த உரையாடலுக்கு பிறகு அனைத்து வீரர்களையும் அவரை கட்டிப்பிடித்தனர். தற்போது இந்த வீடியோ பிசிசிஐ தனது ட்விட்டர் பதிவில் பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ சில மணி நேரத்தில் இவை மிகவும் வைரலாகி ஷேர் செய்யப்பட்டு வருகிறது.