Viral Video: வங்கதேசம் உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவரது கோபத்தால்தான் அவர் அடிக்கடி பிரச்சனைகளை சந்திக்கிறார். சில நேரங்களில், ஷாகிப் கிரிக்கெட் நிகழ்வுகளில், சில சமயங்களில் தனிப்பட்ட வாழ்க்கையில் தனது கோபத்தை வெளிப்படுத்திகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அவர் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், நூற்றுக்கணக்கானவர்கள் சூழப்பட்டிருந்தபோது, ​​பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஷாகிப் ஒரு ரசிகரை அடிப்பதை பார்க்கமுடிகிறது. இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஷகிப் அல் ஹசனுக்கும், சர்ச்சைக்கும் ஏழாம் பொருத்தம்தான். குறிப்பாக வங்கதேச கிரிக்கெட்டில், களத்தில் அவரது கோபத்தை பல சந்தர்ப்பங்களில் அனைத்து தவறான காரணங்களுக்காகவும் அவர் வெளிக்காட்டியுள்ளார். மேலும், அதையடுத்து அவர் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்கிறார். அதில், சமீபத்திய சம்பவமும் அடங்கும். அவரின் தொப்பி மீது ரசிகர் கைவைத்த நிலையில், தொப்பியைக் கொண்டே அவர் ரசிகரை அடிப்பது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.