சச்சின், பான்டிங் என அனைவரையும் பின்னுக்கு தள்ளிய கோலி!
இலங்கையை எதிர்த்து, அனைத்து தரப்பு போட்டிகளிலும் 3000 ரன்களை கடந்த வலது கை மட்டையாளர்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் நாக்பூரில் நடைப்பெற்று வருகின்றது. இப்போட்டியில் தனது 19 வது சதத்தினை பூர்த்தி செய்ததன் மூலம், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
நாக்பூரில் நடைப்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி 213 ரன்களை குவித்துள்ளார். இந்த ரன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிரைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
கோலியின் சதம் கொடுத்த பட்டியல்...
கோலியின் இன்றைய 5-வது 200 மூலம் இவர், கேப்டானாக இருந்து 5 இரட்டை சதம் அடித்தவர் எனும் ப்ரைன்லாரா சாதனையை சமன் செய்துள்ளார்.
இலங்கையை எதிர்த்து, அனைத்து தரப்பு போட்டிகளிலும் 3000 ரன்களை கடந்த வலது கை மட்டையாளர்.
2017-ஆம் ஆண்டில் 10 வது சதம். கேப்டனாக இருந்து எந்த வீரரும் இந்த இலக்கினை எட்டவில்லை, ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பான்டிங் மட்டும் இதற்கு முன் ஒரே ஆண்டில் 9 சதங்களை அடித்துள்ளார்.
கேப்டனாக கோலியின் 12-வது சதம் இது., முன்னதாக இந்திய நட்சத்திர ஆட்டகாரர் 11 சதங்களை தான் கேப்டனாக இருந்த காலத்தில் அடித்துள்ளார். முன்னால் இந்திய கேப்டன் அசாருதின் 9 சதங்களும், சச்சின் டென்டுல்கர் 7 சதங்களையும் தங்களது பட்டியலில் வைத்துள்ளனர்.