விராட் கோலியின் குழந்தைக்கு மிரட்டல்; இன்சமாம் உல் ஹக் கண்டனம்
டி20 உலகக் கோப்பையை வெல்லும் வலுவான போட்டியாளராக இருக்கும் இந்திய அணி, தற்போது அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறும் நிலையை எட்டியது.
துபாய்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்திக்க உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முன்னதாக இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையை வெல்லும் வலுவான போட்டியாளராக இருக்கும் இந்திய அணி, தற்போது அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறும் நிலையை எட்டியது. தற்போது இந்திய அணிக்கு அரையிறுதிக்கான கதவுகள் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டன.
இந்நிலையில், தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல்கள் வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ALSO READ | விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!
ஒருசிலர் இந்திய கேப்டன் விராட் கோலியின் மகள் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மிரட்டும் விதமாக பேசி வருகின்றனர். இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்துள்ளது. மேலும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மனித்தன்மையற்ற செயலை இன்சமாம் உல் ஹக் (Inzamam Ul Haq), முகமது ஆமீர் உள்ளிட்டோர் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இன்சமாம் உல் ஹக் கூறியதாவது., விராட் கோலி மகள் மீது மிரட்டல் விடுக்கப்படுவதாக செய்திகள் மூலம் நான் அறிய வந்தேன். கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமே என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
விராட் கோலியின் பேட்டிங், அவரது கேப்டன்சியை விமர்சனம் செய்யலாம். ஆனால் யாருக்கும் அவரின் தனிப்பட்ட குடும்பத்தை தாக்கி பேசுவதும், மிரட்டுவதும் தவறான விஷயம். இது கண்டனத்துக்குறியது என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர், இந்தியா ஒரு சிறந்த அணி என்று நான் இன்னும் நம்புகிறேன், இதெல்லாம் நல்ல நேரம், மோசமான நேரத்தை பொறுத்தது. இதற்காக வீரர்களையும் அவர்களது குடும்பத்தையும் துஷ்பிரயோகம் செய்வது மிகவும் அசிங்கமானவை. இது வெறும் விளையாட்டுத்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்று முகமது ஆமீர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | ஐபிஎல் ஆட்டத்தை மட்டும் வைத்து வீரர்களை தேர்வு செய்தது தவறா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR