குறைந்த இன்னிங்ஸில் 10000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் பலவற்று முறியடித்து வரும் விராட் கோலி, மேலும் ஒரு சாதனையினை மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் முறியடித்துள்ளார்.


இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெறவுள்ள 5 ஒருநாள் போட்டி கொண்ட ஒருநாள் தொடர் கடந்த அக்டோபர் 21-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று விஷாகப்பட்டினம் ADC-VDCA மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைப்பெற்று வருகிறது.


இப்போட்டியில் 29 வயதாகும் விராட் கோலி குறைந்த இன்னிங்ஸில் 10000 ரன்கள் எட்டிய வீரர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 10000-வது ரன்னை அடித்தார். அப்போது அவருக்கு வயது 28...


குறைந்த போட்டியில் 10000 ரன் அடித்த வீரர்கள்...


  • விராட் கோலி (இந்தியா) - 205 இன்னிங்ஸ்

  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 259 இன்னிங்ஸ்

  • சௌரவ் கங்குளி (இந்தியா) - 263 இன்னிங்ஸ்

  • ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 266 இன்னிங்ஸ்

  • ஜாக்குயிஸ் கலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 272 இன்னிங்ஸ்

  • MS டோனி (இந்தியா) - 273 இன்னிங்ஸ்


இந்த சாதனையின் மூலம் 10000 ரன்களை கடந்த 5-வது இந்தியார், 13-வது கிரிக்கெட் ஆட்டகாரர் என்னும் பெருமையினையும் பெற்றுள்ளார். கோலி-யை தவிர்த்து 10000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் முறையே டெண்டுல்கர், கங்குளி, ராகுல் டிராவிட், டோனி ஆகும்.