எனது உடற்பயிற்சி ரகசியம் - விராட் கோஹ்லி விளக்கம்
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட்கோஹ்லி தன்னுடைய உடற்பயிற்சி குறித்து கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர் தான் என்னுடைய உடல் மாற்றத்துக்கு முக்கிய காரணம். 2012-ம் ஆண்டு பயிற்சியாளர் பிளெட்சர், ‘உடல் திறனை மாற்ற வேண்டும். தகுதியான உடலமைப்பு இருந்தால் நீண்ட நேரம் நின்று விளையாட முடியும். அதன் மூலம் கூடுதல் ரன்களை குவிக்கலாம். அதற்கு கடுமையான உடற்பயிற்சி தேவை’என கூறினார்.
அதைத்தொடர்ந்து தீவிரமாக உடற் பயிற்சி செய்தேன். ஐபிஎல் போட்டிகளின் போது இந்த பயிற்சி மேலும் அதிகமானது. அதனால் தான் டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க முடிகிறது. உடற்பயிற்சி மட்டும் உடலை தகுதிப்படுத்தாது, நல்ல உணவுப் பழக்கமும் வேண்டும். வெற்றிகளை பொறுத்தமட்டில் நான் மட்டுமல்ல, எங்களுடைய அணியினரும் சிறப்பாக விளையாடுவதால் தான் சாத்தியமாகிறது.
இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைபற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.