T20 தொடரில் இருந்து விராட் கோலி மற்றும் டோனி-க்கு ஓய்வு!
மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது!
மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.
இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது எனினும் இரண்டாவது ஒருநாள் போட்டி முடிவு இன்றி ட்ராவில் முடிவடைந்தது.
இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைப்பெறுகின்றது. இந்நிலையில் வரும் நவம்பர் 4 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைப்பெறவுள்ள இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. BCCI அறிவித்துள்ள இந்த வீரர்கள் பட்டியலில் இருந்து விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
டி20 தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்...
ரோகித் ஷர்மா(C), ஷிகர் தவான், KL ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பான்டே, ஸ்ரேயஷ் ஐயர், ரிசாப் பன்ட்(WK), குர்னல் பான்டே, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது, உமேஷ் யாதவ், ஷஹபாஷ் நதீம்.
அதேவேலையில் நடப்பு தொடரை அடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அணியின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது...
டி20 அணி : விராட் கோலி (C), ரோகித் ஷர்மா, ஷிக்கர் தவான், KL ராகுல், ஸ்ரேயஷ் ஐயர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பான்டே, ரிசாப் பன்ட்(WK), யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குர்னல் பான்டே, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது, உமேஷ் யாதவ்,
டெஸ்ட் அணி : விராட் கோலி (C), முரளி விஜய், KL ராகுல், ப்ரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரோகித் ஷர்மா, ரிஷாப் பன்ட், பார்த்திவி படேல், அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமிர இஷான்ட் ஷர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார்.