உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட BCCI-க்கான நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளதன் படி, இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கனைகளுக்கான சம்பள விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பள பட்டியளானது அக்டோபர் மாதம் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலாக காலத்திற்கானது எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியளின் படி A+ தர வீரர்களுக்கு 7 கோடி சம்பளம் எனவும், A தர வீரர்களுக்கு 5 கோடி எனவும், B மற்றும் C தர வீரர்களுக்கான சம்பளம் ஆனது முறையே 3 மற்றும் 1 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.



அதேவேலையில் A+, A பட்டியளில் இடம்பெரும் வீரர்களின் விவரம் பற்றியும் BCCI வெளியிட்டுள்ளது. 


பெண்கள் அணியை பொறுத்தமட்டில், A தர வீராங்கனைகளுக்கு 50 லட்சம் எனவும், B தர வீராங்கனைகளுக்கு 30 லட்சம் எனவும், C தர வீராங்கனைகளுக்கு 10 லட்சம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



அதேநேரத்தில் உள்ளூர் போட்டிகளுக்கான சம்பளத்தை பொருத்தமட்டில் 200% உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தற்போது உள்ளூர் போட்டிகளுக்கு ரூ.17500 அளிக்கப்படுகிறது. தற்போது வெளியிட்டுள்ள சம்பள பட்டியலின் படி இந்த சம்பளமானது ரூ.35000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.