Virat, Rohit Retirement | இந்திய கிரிக்கெட் அணி இப்போது மாற்றத்தை பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி மிக மோசமாக இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் படுமோசமாக இருந்தது. விராட் கோலி ஒரு இன்னிங்ஸில் சதமடித்து இருந்தாலும் மற்ற போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் வரவில்லை. பந்துவீச்சில் பும்ராவை தவிர மற்ற பவுலர்களிடம் எதிர்பார்த்தளவுக்கு பெஸ்ட் பவுலிங் வெளிப்படவில்லை. இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் அதிருப்தியில் இருக்கிறார். தனக்கு ஏதுவான ஒரு அணியை கட்டமைக்கவும் அவர் விரும்புகிறார். குறிப்பாக சீனியர் பிளேயர்கள் இல்லாமல் புதிய டெஸ்ட் அணியை உருவாக்கவும் கவுதம் கம்பீர் முடிவெடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் தெரியபடுத்தியுள்ளார் கவுதம் கம்பீர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிவடையும்போது சீனியர் பிளேயர்கள் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும், ஓய்வு பெற இன்னும் நேரம் இருப்பதாகவும் தெரிவித்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தான் செய்தியாளர்களை சந்தித்த கவுதம் கம்பீர், இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்பதை உடனடியாக கூற முடியாது. இன்னும் 5 முதல் 6 மாதங்களுக்குப் பிறகு தான் முடிவு கிடைக்கும் என கூறியுள்ளார். அதாவது, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர். இந்த இரண்டு தொடர்களையும் மனதில் வைத்து அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.


மேலும் படிக்க | கம்பீர் நீக்கப்பட்டால் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர் தான்!


சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிந்ததும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிடுவார்கள். இதனை டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் இருவரும் பேட்டியிலேயே தெரிவித்துவிட்டனர். அதனால், இந்திய அணிக்காக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிக்காக கடைசியாக ஆடப்போடும் தொடர் சாம்பியன்ஸ் டிராபி தான். அதன் பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கு விடை கொடுக்க வாய்ப்புள்ளது.


இதன்பிறகே இந்திய அணிக்கு புதிய முழுநேர கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. கவுதம் கம்பீர் இந்த தொடர்களில் மனதில் வைத்து தான் இன்னும் 6 மாதங்களுக்கு எதுவும் சொல்ல முடியாது என கூறியுள்ளார். இப்போதைய சூழலில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது தான் கடைசி சர்வதேச டெஸ்ட் தொடராக இருக்க வாய்ப்புள்ளது.


புதிய கேப்டன் யார்?


ஒருவேளை ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டால் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பு சூர்யகுமார் யாதவ் வசம் செல்ல வாய்ப்புள்ளது. டெஸ்ட் கேப்டன் பொறுப்பு ஜஸ்பிரித் பும்ரா வசம் செல்ல வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | பும்ரா காயம்! அவருக்கு பதில் இந்திய அணியில் இணையப்போகும் 3 வீரர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ