பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 6வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளெசிஸ் நேரடியாக பவுலிங் செய்வதாக அறிவித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் அந்த அணயின் கேப்டன் ஷிகர் தவான், பேரிஸ்டோவ் ஓப்பனிங் இறங்கினர். தவான் ஒரு நிதானமாக ஆடினாலும் பேரிஸ்டோவ் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பினார். 6 பந்துகளில் 2 பவுண்டரி அடித்து 8 ரன்கள் எடுதிருந்தபோது கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். அவருடைய விக்கெட்டை முகமது சிராஜ் எடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏப்பா பிசிசிஐ, இப்படி நல்லா விளையாடுற பிளேயரை இந்திய டீமில் இருந்து எதுக்குப்பா தூங்குனீங்க?


அடுத்து வந்த பிரப்சிம்ரன் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டாக அதிரடி பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டோன் 17 ரன்களுக்கு அவுட்டானார். மிகச் சிறிய மைதானம் என்பதால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் அபாரமாக இருப்பதால் வாண வேடிக்கை இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகளால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆர்சிபி அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. ஏனென்றால் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழுந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் தவான் விக்கெட்டையும் பறிகொடுத்தது. அவர் சிக்சர் அடிக்க முயற்சித்தபோது கேட்ச் என்ற முறையில் அவுட்டானார்.



சாம்கரன் 23 ரன்களும், ஜிதேஷ் சர்மா 27 ரன்களும் எடுத்து அவுட்டாக இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷஷாங் வெறும் 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. போட்டி ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும்போது, ரசிகர்கள் மத்தியில் இருந்த டுபிளிகேட் தவான் கேமரா மேனின் கண்களில் சிக்கினார்.



தவானைப் போலவே மொட்டை தலையில் கோடு போட்டதுபோல் ஹேர்ஸ்டைல், தாடி மற்றும் முகம் எல்லாமே இருந்தது. உடனடியாக அவரை பெரிய ஸ்கிரீனில் காண்பிக்க, டூபிளிகேட் தவானைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார் விராட் கோலி. அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. உடனே தவானையும் கேமராமேன் போகஸ் செய்து டூபிளிகேட் தவானையும், ரியல் தவானையும் ஒரே ஸ்கிரீனில் காண்பிக்க ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டமும் வியந்தனர். இதனால், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் டூபிளிகேட் தவான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.


மேலும் படிக்க | மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கும் விராட் கோலி? ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ