துபாய்: உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்ற பிறகு பல்வேறு விமர்சனங்களுக்கு இந்திய அணி வீரர்கள் உள்ளாயினர். குறிப்பாக முகமது ஷமியின் மதத்தைத் தாக்கி பல்வேறு விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தது.  இது குறித்து பேசிய கோலி, ஷமியின் மதத்தை வைத்து பேசுபவர்கள் "முதுகெலும்பு இல்லாதவர்கள்" என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.  ஒருவரை குறிவைத்து தாக்குவது மிகவும் பரிதாபகரமான விஷயம் என்றும் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ மாற்றம் இன்றி அதே அணியுடன் களம் இறங்கும் இந்தியா?


இந்தியா அணி 10 விக்கெட் தோல்வி அடைந்ததால் ஷமி தனது முஸ்லிம் அடையாளத்திற்காக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்.  இது குறித்து பேசிய கோலி,  "ஒருவரின் மதத்தின் அடிப்படையில் ஒருவரைத் தாக்குவது மிகவும் பரிதாபகரமான விஷயம்.  என்னை பொறுத்தவரை முதுகெலும்பு இல்லாத நபர்கள் தான் சமூக ஊடகங்களில் ட்ரோல்கள் செய்கின்றனர்.  அவர்கள் நிஜ வாழ்க்கையில் நேருக்குநேராக பேச தைரியம் இல்லாத நபர்களே. 



சச்சின் டெண்டுல்கர் உட்பட பல நட்சத்திர வீரர்கள் ஷமிக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.   ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்தையும்,  ஒரு குறிப்பிட்ட விசயத்தை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த உரிமை உண்டு.  ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் யாரையும் குறிப்பாக மதத்தின் மீது விமர்சனம் வைப்பது ஏற்றுக்கொள்ள கூறியது இல்லை.  முகமது ஷமி கடந்த வருடங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பல டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டிகளில் வெற்றிகளை தேடி தந்துள்ளார்.  ஜஸ்பிரித் பும்ராவும் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்து வருகிறார்.   


நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம்.  அணி நிர்வாகம் ஷமிக்கு தங்களது முழு ஆதரவரை அளித்துள்ளது.  எங்கள் சகோதரத்துவம், அணிக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.  சமூக ஊடகங்களில் போலி முகங்களில் மூலம் அனைவரையும் கேலி கிண்டல்கள் செய்து வருகின்றனர்.  இது பார்க்க மிகவும் துரதிர்ஷ்டவசமாக, வருத்தமாக இருக்கிறது.  இது போன்ற விமர்சனங்கள் எங்களை ஒருபோதும் பாதிப்பதில்லை, மேலும் அதில் கவனமும் செலுத்த போவதில்லை.  சர்வதேச அளவில் விளையாடுவதற்கு என்ன தேவை என்று மக்களுக்குப் புரியவில்லை, நாங்கள் என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்பதை அனைவருக்கும் நாங்கள் செல்லப் போவதும் இல்லை," என்று கூறினார்.  நாளை இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது.  


ALSO READ விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR