`நான் செத்துவிடுவேன்...` நெறியாளர் கேள்விக்கு டக்குனு சொல்லிய விராட் கோலி - எதற்கு தெரியுமா?
Virat Kohli: களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது குறித்து நெறியாளர் கேட்ட கேள்விக்கு, விராட் கோலி அளித்த பதில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Virat Kohli: விராட் கோலியின் ஆக்ரோஷமான நடத்தை அவரது போட்டியாளர்களை மிகவும் அச்சுறுத்தக் கூடிய ஒன்றாகும். களத்தில் இருக்கும் போது, கோலியின் போட்டி மீதான தீவிரம் அடிக்கடி அவர் ஈடுபடும் உற்சாகமான கொண்டாட்டங்களில் வெளிப்படும்.
உண்மையில், அவர் இந்திய கிரிக்கெட் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்தும் போது, அவர் களத்தில் அதிக ஆக்ரோஷமானவராக இருப்பதை பலமுறை நாம் பார்த்திருப்போம். அப்போது, விராட் கோலி எப்போதுமே இப்படித்தான் இருப்பாரா என்ற கேள்வியும் நம்மிடம் எழுந்திருக்கும்.
இதே கேள்வியை, நெறியாளர் ஒருவர் கோலியிடம் கேட்டுள்ளார். அதற்கு கோலி அளித்த பதில் தான் ஹைலைட் எனலாம். சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில்,"கோலி தனது குழந்தைப் பருவத்தில் இருந்து, யாருடன் உடல் ரீதியான சண்டையில் ஈடுபடவில்லை" என்பதை வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க | இந்த சீசனுடன் ஓய்வா? தோனி பதிலால் கண்கலங்கிய ரசிகர்கள்! என்னா மனுஷம் யா?
உடல் ரீதியாக சண்டை போட வாய்ப்பே இல்லை. யாராவது என்னைத் தாக்கினான் நான் செத்துவிடுவேன் (சிரித்துக்கொண்ட கூறினார்), சண்டை நடந்தால், என்னவாகும் என்று எனக்கே தெரியாது. எனவே, நான் ஒருபோதும் சண்டையிடுவது இல்லை" என்று கோலி கூறினார்.
அவர் வெளிப்படுத்தும் வாய்மொழி ஆக்ரோஷத்தை குறித்து கேட்டபோது,"வாய்மொழியாக, நான் எதையும் சொல்ல முடியும், ஆனால் நான் மைதானத்தில் உடல் ரீதியாக சண்டை செய்ய இயலாது" என்று கோஹ்லி உடனடியாக பதிலளித்தார்.
மைதானத்தில் வாய்மொழி ஆக்ரோஷம் காட்டுவதற்கு வேடிக்கையான காரணத்தையும் கூறியுள்ளார். "நான் ஆக்ரோஷமாக இருப்பது அதுவும் மைதானத்தில் கத்துவது ஏனென்றால், அது பெரிய சண்டையா மாறாது என்று எனக்கு தெரியும். நிச்சயம் கள நடுவர் எங்களை தடுத்துவிடுவார்" என்றார். சமீபத்தில், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில், ருத்ராஜ் கெய்க்வாட் அவுட்டானபோது, விராட் கோலி ஆக்ரோஷமான முறையில் கொண்டாடியதற்கு, விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி பிசிசிஐ அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஏய் சும்மா இருடா.. மைதானத்தில் ஜடேஜாவை எச்சரித்த தோனி! என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ