இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி-க்கு ஓய்வா?
விராட் கோலி இன்று ஓய்வு எடுக்க உள்ளார் இதன் காரணமாக போட்டியின் முழு தலைமை பொறுப்பினை ரோகித் சர்மா ஏற்றுள்ளார். இதற்கிடையில், கேன் வில்லியம்சன் தனது இடைவேளையில் தொடருவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி இன்று ஓய்வு எடுக்க உள்ளார் இதன் காரணமாக போட்டியின் முழு தலைமை பொறுப்பினை ரோகித் சர்மா ஏற்றுள்ளார். இதற்கிடையில், கேன் வில்லியம்சன் தனது இடைவேளையில் தொடருவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய போட்டியில் விராட் கோலி மூன்று மாற்றங்களைச் செய்து, இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார். ஆனால், சஞ்சு சாம்சனால் உண்மையில் அதைப் பயன்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். இன்றைய விளையாடும் லெவன் போட்டியில் பங்கேற்க சஞ்சுக்கு வாய்ப்பு கிடைக்குமா, அல்லது ரோகித் சர்மா அவரது இடத்தை மீட்பாரா? என்ற கேள்வி எழுந்தது. எனினும் விராட் தானே ஹிட்மேனுக்கு வழி வகுக்கக்கூடும், என்று மற்றொரு கேள்வி நிலவியது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கோலிக்கு பதில் சஞ்சு சாம்சன் இன்று களம் இறங்க இருப்பதாக இன்றைய அணித்தலைவர் ரோகித் சர்மா உறுதிபடுத்தியுள்ளார்.
முன்னதாக இப்போட்டிய்ல டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
டாஸ் வென்ற ரோகித் சர்மா போட்டியின் முன் ரசிகர்களுக்கு தெரிவிக்கையில்., "நாங்கள் முதலில் பேட் செய்வோம்; நான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது. இது ஒரு நல்ல ஆடுகளம் போல் தோன்றுகிறது, அதையே எங்கள் அணிக்கு சவால் செய்ய விரும்புகிறோம். நாங்கள் சில மாற்றங்களைச் செய்ய நினைத்தோம், ஆனால் கடைசி ஆட்டத்தில் நாங்கள் விளையாடிய சேர்க்கை மிகவும் நன்றாக இருந்தது, அதைத் தொடரவும், அவர்களுக்கு நீண்ட ரன் கொடுக்கவும் விரும்புகிறோம். நாங்கள் வேகத்தைத் தொடர விரும்புகிறோம், மேலும் தொடரை 5-0 என்ற கணக்கில் வெல்வதற்கான வாய்ப்பினை எதிர்பார்க்கிறோம். அணியில் ஒரே மாற்றம் விராட் கோலிக்கு பதில் நான் களமிறங்குவேன், துவக்க ஆட்டக்காரராய் சஞ்சு களமிறங்குவார்." என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லயம்சன் காயம் காரணமாக முந்தைய போட்டியில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அணியின் மூத்த பந்துவீச்சாளர் டிம் சௌதீ தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இந்தியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் இன்றைய போட்டி நியூசிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி தருவதற்கான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.