18:38 24-10-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குல்தீப் வீசிய பந்தில் சந்திரபவுள் ஹெம்ராஜ் 32(24) வெளியேறினார்! 



தற்போதைய நிலவரப்படி.. 9 ஓவர் முடிவில் மேற்கிந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் குவித்துள்ளது! ஷாய் ஹோப் 14(13), மெர்லான் சாமுயுல்ஸ் 0(0) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



17:27 24-10-2018


நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 321 ரன்கள் குவித்துள்ளது. 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய அணி களமிறங்கவுள்ளது.



இந்திய இன்னிங்ஸ் முடிவில் விராட் கோலி 157(129) மற்றும் மொகமது ஷமி 0(1) ரன்களுடன் களத்தில் இருந்தனர்!



17:02 24-10-2018


43.5 : சர்வதேச ஒருநாள் தொடர்களில் தனது 10000 ரன்களை கடந்த விராட் கோலி 37-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்!



தற்போதைய நிலவரப்படி இந்தியா 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 109(112) மற்றும் ரவிந்திர ஜடேஜா 8(8) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



16:19 24-10-2018
205 போட்டிகளில் விளையாடி 10000 ரன்கள் கடந்து விராட் கோலி சாதனை!



தற்போதைய நிலைவரப்படி இந்தியா 38 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 83(94) மற்றும் டோனி 16(16) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



14:18 24-10-2018


8.4: WICKET! ஷிகர் தவான் 29(30) ரன்களில் வெறியேறினார்!



தற்போதைய நிலவரப்படி இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் குவித்துள்ளது. விராட்கோலி 13(20) மற்றும் அம்பத்தி ராயுடு 2(2) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



14:03 24-10-2018


3.1: WICKET! ரோகித் ஷர்மா 4(8) ரன்களில் வெறியேறினார்!



தற்போதைய நிலவரப்படி இந்தியா 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் குவித்துள்ளது. ஷிகர் தவான் 22(21) மற்றும் விராட்கோலி 6(13) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



13:25 24-10-2018
விசாகப்பட்டினம் ADC-VDCA மைதானத்தில் இந்தியா இதுவரை...


vs பாக்கிஸ்தான், 2005: 58 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி
vs இலங்கை, 2007: 7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி
vs ஆஸ்திரேலியா, 2010: 5 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி
vs மேற்கிந்தியா, 2011: 5 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி
vs மேற்கிந்தியா, 2013: 2 விக்கெட் வித்தியசத்தில் தோல்வி
vs நியூசிலாந்து, 2016: 190 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி
vs இலங்கை, 2017: 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி



13:11 24-10-2018


டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்துள்ளது!




சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றினை இன்று நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி முறியடிக்கவுள்ளார்!


கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் பலவற்று முறியடித்து வரும் விராட் கோலி, மேலும் ஒரு சாதனையினை மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் முறியடிக்கவுள்ளார்.


இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெறவுள்ள 5 ஒருநாள் போட்டி கொண்ட ஒருநாள் தொடர் கடந்த அக்டோபர் 21-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று விஷாகப்பட்டினம் ADC-VDCA மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.



இன்றைய போட்டியில் அணித்தலைவர் விராட் கோலி புதிய சாதனைகள் இரண்டினை படைக்கவுள்ளார். 


இன்றைய போட்டியில்...


  • 40 ரன்கள் குவித்தால் - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக குறைந்த போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையினை பெருவார். தற்போதைய புள்ளி விவரங்களின் படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 39 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1573 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர். 

  • 81 ரன்கள் குவித்தால் - குறைந்த போட்டிகளில் 10000 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்னும் பெருமையினை பெருவார். இந்தியாவிற்காக 212 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் இதுவரை 9919 ரன்கள் குவித்துள்ளார்.

  • ரோகித் - ஷிகர் இணை 29 குவித்தால் - ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது மிக வெற்றிகரமான தொடக்க ஜோடி என்ற பெருமையினை பெறுவர். இவர்களுக்கு முன்னதாக சச்சின் - சேவாக் இணை முதல் இடத்தில் உள்ளனர்.

  • விஷாகப்பட்டினம் ADC-VDCA மைதானத்தில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்தியாவை வீழ்த்திய ஒரு அணி எது தெரியுமா... மேற்கிந்திய தீவுகள் அணி..?!


விஷாகப்பட்டினம் ADC-VDCA மைதானத்தில் நடைப்பெறும் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் துவங்கும்...