இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் தொடர் தர்மசாலாவில் நாளை நடைபெற உள்ளது. இந்த டெஸ்டில் விராட் கோலி பங்கேற்பாரா? இல்லையா? என்பது  சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஞ்சியில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸின்போது பவுண்டரியைத் தடுக்க முயன்ற கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஞ்சி டெஸ்டிலேயே அவர் களம் இறங்கினார்.


நாளை டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விராட் கோலி விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இவருக்கான மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.


காயம் குறித்து விராட் கோலி கூறியதாவது:- நான் 100% உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன். இன்றிரவு அல்லது நாளை காலை நான் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.


இதுவரை நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டி டிராவில் முடிய இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது. எனவே தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய கடைசி 4-வது டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது.