கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் அரிசி திருடியதாக கூறி மல்லான் என்பவரின் மகன் மதுவை(வயது27) பொதுமக்கள் சராமரியாக கட்டிபோட்டு அடித்தனர். பின்னர் போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப் பட்டார். அவரை போலீசார் தங்கள் வாகனத்தில் ஏற்றிய போது, வாகனத்திலேயே அவர் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். அவரை கட்டி வைத்து அடிக்கும் போது சிலர் செல்பி புகைப்படங்களும் எடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்குலியை சீண்டிய வீரேந்திர சேவாக்!!


அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவின. இதைபார்த்த பலர் மதுவை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மனித உரிமை மீறல் சம்பவம் என பலர் கூறினர். 


Video: கேரளா இளைஞர் மது எப்படி இறந்தார்


இச்சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பிரிவு 174 சிஆர்பிசி கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து  விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். 


இந்நிலையில், அரிசி திருடியதற்காக இளைஞர்களால் அடித்துக்கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்திற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் நிதியுதவி அளித்துள்ளார். மதுவின் தாயாரான மல்லி பெயருக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காசோலையை வீரேந்திர சேவாக் வழங்கியுள்ளார். சமூக ஆர்வலர் ராகுல் ஆஹோன் இதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த காசோலை வரும் ஏப்ரல் 11-ம் தேதி மதுவின் தாய்க்கு வழங்ககப்படும் என ஏஎன்ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சேவாக் ஆதரவு