உலக கோப்பை இங்கிலாந்து வெல்லும் சேவாக்கிடம் ரூ.10 லட்சம் பெட்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து உலக கோப்பையை வெல்லும் என அந்நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கன் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கிடம் ரூபாய் 10 லட்சம் பெட் கட்டியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்றதை நாடே கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் பியர்ஸ் மோர்கன் அவர்கள் இரண்டு பதக்கங்கள் வென்றது எல்லாம் ஒரு பெரிய வெற்றியா? இதைக்கொண்டாட அவமானமாக இல்லையா என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் எல்லா வெற்றியையும் கொண்டாடுவது எங்கள் வழக்கம், அதில் சிறியது பெரியது என்ற வித்தியாசம் எங்களுக்கு இல்லை.
ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்த போதிலும் உங்களால் ஒரு உலக கோப்பை கூட வாங்க முடியவில்லை, ஆனால் இன்னும் உலக கோப்பை போட்டிகள் விளயாடுவது உங்களுக்கு அவமானமாக இல்லையா? என டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து 444 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளதை அடுத்து பியர்ஸ் மோர்கன் சேவாக்கிடம் சவால் விட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு பதிவினை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஹாய் சேவாக், இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முன்பு இங்கிலாந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும் என ரூ.10 லட்சம் பெட் கட்டுகிறேன். சவாலை ஏற்கிறீர்களா? என கேட்டுள்ளார்.