சமயம் பார்த்து ரோஹித் சர்மாவை கலாய்த்த இஷான் கிஷன்! வைரலாகும் வீடியோ!
India vs Newzeland: பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பிறகு தன்னை அணியில் எடுக்காதது குறித்து இஷான் கிஷன் ரோஹித் சர்மாவை ட்ரோல் செய்துள்ளார்.
India vs Newzeland: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடினார். இஷான் கடந்த மாதம் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தைப் அடித்த பிறகு அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இஷான் கிஷன் அதி வேகமான ஒருநாள் இரட்டை சதத்தை அடித்தார், ஆனால் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் இலங்கை ஒருநாள் தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்டதால், KL ராகுல் விக்கெட் கீப்பிங் செய்து வந்தார். கிஷன் ஒருநாள் போட்டிக்கு திரும்பிய நாளில், ஹைதராபாத்தில் இந்தியாவுக்கு மற்றொரு இரட்டை சதம் கிடைத்தது. இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு, கேப்டன் ரோஹித், ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் மூவரும் ஒரு சிறிய நேர்காணலுக்கு சென்றனர்.
மேலும் படிக்க: இரட்டை சதம் விளாசி வரலாறு படைத்த இஷான்! ரோகித், சச்சின் எலைட் லிஸ்டில் இடம்
ரோஹித் கடைசி போட்டியில் இரட்டை சதம் அடித்த பிறகு ஏன் விளையாடவில்லை என்று இஷானிடம் கேலியாக கேட்டார். அதற்கு பதில் அளித்த இஷான் கிஷன், “ரோஹித் பையா, நீங்கள் தான் கேப்டன்” என்று பதிலளித்தார். கிஷான் கில்லிடம் பெரிய போட்டிக்கு எப்படித் தயாராகிறார் என்று கேட்டார், அதற்கு ரோஹித், "உங்களுக்குத் தெரியும், நீங்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறீர்கள்" என்று பதிலளித்தார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜின் சிறந்த பந்துவீச்சு இந்திய அணிக்கு முற்றிலும் உதவியது. மைக்கேல் பிரேஸ்வெல்லின் சதம் போட்டியை நியூஸிலாந்து பக்கம் கொண்டு சென்றாலும் இறுதியில் இந்தியா வென்றது.
“உண்மையைச் சொல்வதென்றால், பிரேஸ்வெல் பேட்டிங் செய்யும் விதம் சிறப்பாக இருந்தது. எவ்வளவு நன்றாக பந்து வீசினாலும் ரன்களை கொண்டு வந்தார். நாங்கள் சரியாக இருப்போம் என்று எங்களுக்குத் தெரியும்., அதிஷ்டவசமாக அதுதான் நடந்தது. நான் டாஸ்ஸில் சொன்னேன், நாங்கள் எங்களுக்கு நாங்களே சவால் விடுவதைப் பார்க்க விரும்புகிறேன், நான் எதிர்பார்த்த சூழ்நிலை இல்லை, ஆனால் அது நன்றாக இருக்கிறது, ”என்று ரோஹித் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ