டோனியிடம் ஏன் சஹல் திட்டு வாங்கினார்?- வீடியோ
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி எப்போதுமே கூலாக காணப்படுவார். ஆனால் நேற்று பவுலர் சஹலிடம் தனது கோபத்தை வெளிக்காட்டி ஆச்சரியமூட்டினார்.
பெங்களூர்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி எப்போதுமே கூலாக காணப்படுவார். ஆனால் நேற்று பவுலர் சஹலிடம் தனது கோபத்தை வெளிக்காட்டி ஆச்சரியமூட்டினார்.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கடைசி டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 202 ரன்களை குவித்தது. இந்தியா அணி பேட்டிங் செய்து முடித்ததும் இங்கிலாந்த் அணி விளையாடி வந்தது.
இன்ஹ்லங் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த 2-வது ஓவரை வீசும் பொறுப்பை இளம் சுழற்பந்து வீச்சாளர் சஹலுக்கு கொடுத்தார் கேப்டன் விராட் கோலி.
அந்த ஓவரின் 3-வது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார் சஹல். ஆனால் அடுத்த பந்திலேயே மற்றொரு விக்கெட்டான ஜேசன் ராய்-யை வீழ்த்தும் ஒரு வாய்ப்பை தவறவிட்டார் சஹல்.
சஹல் வீசிய அந்த பந்தை எதிர்கொண்ட ஜோ ரூட் அவர் மிட்-ஆப் திசையில் பந்தை அடித்துவிட்டு ரன் ஓட எத்தனித்தார். கோலி டைவ் செய்து பந்தை பிடித்து அதே வேகத்தில் சஹலை நோக்கி எறிந்தார். சஹல் கோலியின் துரிதத்தை பார்த்து அஞ்சிய ஜோ ரூட், உடனடியாக ரன் ஓடும் முடிவை மாற்றிக்கொண்டார். ஜேசன் ராயை நோக்கி ஓடிவர வேண்டாம் என கூறினார். ஆனால் ஜேசன் ராய் ஓட ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில் சஹல் தனது கையில் வந்து சேர்ந்த பந்தை டோனியிடம் வீசினார். அவர் ஜோ ரூட்டை அவுட் செய்யும் எண்ணத்தில் அப்படி செய்தார். ஆனால் ரூட் எளிதாக கிரீசுக்குள் போய்விட்டார். ஆனால், எதிர்முனையில் ஜோசன் ராய் பாதி பிட்ச் அளவுக்கு ஓடி வந்ததால் தாமதமாகவே கிரீசுக்குள் திரும்பினார். இதனால் டோனி ஆத்திரமடைந்து கோபத்துடன் சஹலை நோக்கி கத்தினார்.
வீடியோ பார்க்க:-