Video: 94 வயது பெண்மணி உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற பெருமைமிகு தருணம்
World Masters Athletics Championship: 94 வயதான பகவானி தேவி தாகர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்காக தங்கம் வென்ற பெருமை மிக தருணத்தின் வீடியோ.
சாதிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணமும் நோக்கமும் உள்ளவர்களுக்கு, வயது ஒரு தடை அல்ல என்பதை 94 வயதான பகவானி தேவி தாகர் நிரூபித்துள்ளார். வயதான காலத்தில் பலர் வியாதிகளுடனும், வலிகளுடனும் பலர் போராடி வரும் நேரத்தில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வருகிறார்.
இந்தியாவிற்காக விளையாடிய ஹரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்று 94 வயதில், இந்தியாவிற்கு பெருமைசேர்த்ததோடு மட்டுமல்லாமல், உலகிற்கே ஒரு உத்வேகம் அளித்துள்ளார் எனக் கூறலாம்.
பின்லாந்தின் தம்பேரில் நடந்த 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் பகவானி 24.74 வினாடிகளில் கடந்து, தங்கப் பதக்கம் வென்றார். இது தவிர குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
அவர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்ற வீடியோவை இங்கே காணலாம்:
மேலும் படிக்க | விராட் கோலி ரன்கள் அடிக்காததற்கு ரிக்கி பாண்டிங் தான் காரணமா?
மேலும் படிக்க | பெருமைக்காக அணியில் இருக்கிறாரா விராட் கோலி? இளம் வீரர்களின் சோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR