வீடியோ: கால்பந்து மைதானத்தில் ’BHANGRA’ ஆடிய கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் ’விராத் கோலி அறக்கட்டளை’ மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனம் இரண்டும் இணைந்து, தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் விதமாக நட்சத்திர கால்பந்து போட்டி நடத்தியது.
மும்பையில் கடந்த அக் 15-ஆம் நாள் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியும், பாலிவுட் நட்சத்திரங்கள்(ஆல் ஸ்டார் எஃப்சி) அணியும் மோதின.
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியில் 5-வது நிமிடத்தில் டோனி அடித்த கோல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதேபோல் கோலி அடித்த கோல் ஒன்றும் இப்போது வைரலாக பரவி வருகின்றது. ஆனால் சற்று வேறு விதமாக... வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் அவர் கோல் அடிப்பது மற்றும் அடித்ததன் பின் நடனமாடியதையும் பிரபல இந்தி பாடல் ஒன்றுடன் இணைத்து ’பங்ரா ஆடும் கோலி’ என பகிர்ந்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
(நன்றி : unny fa-teachers)
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!