டபிள்யு.பி.ஓ.ஆசிய பசிபிக் பதக்கம்: விஜேந்தர் சிங் அபார வெற்றி
டிச.17 அன்று டபிள்யு.பி.ஓ. ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெய்ட் குத்துச் சண்டையில் தான்சானியா வீரர் பிரான்சிஸ் சீகா என்பவரை இந்தியாவின் விஜேந்தர் எதிர்கொண்டார்.
புதுடெல்லி: டிச.17 அன்று டபிள்யு.பி.ஓ. ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெய்ட் குத்துச் சண்டையில் தான்சானியா வீரர் பிரான்சிஸ் சீகா என்பவரை இந்தியாவின் விஜேந்தர் எதிர்கொண்டார்.
ஆசிய பசிபிக் 'சூப்பர் மிடில்வெயிட்' பட்டத்தை இந்திய வீரர் விஜேந்தர் சிங் தக்கவைத்துக் கொண்டார். தான்சானியாவின் பிரான்சிஸ் செகாவை 'நாக்-அவுட்' செய்து வென்றார்.
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். கடந்த தற்போது தொழில்ரீதியிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
டெல்லியில் நடந்த ஆசிய பசிபிக் 'சூப்பர் மிடில்வெயிட்' பட்டத்தில் விஜேந்தர், தான்சானியாவின் பிரான்சிஸ் செகாவை சந்தித்தார். தலா 3 நிமிடம் வீதம், மொத்தம் 10 சுற்றுகள் போட்டி நடப்பதாக இருந்தது. துவக்கத்தில் செகா ஆக்ரோஷம் காட்டினார். விஜேந்தர் தற்காப்பில் கவனம் செலுத்தினாலும், துல்லியமாக 'பன்ச்' செய்தார். முதலிரண்டு சுற்று முடிவில் விஜேந்தர் 7 குத்து விட்டிருந்தார். இதனால், விஜேந்தர் சிங் 'நாக்-அவுட்' முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், தொடர்ந்து 8-வது போட்டியில் வெற்றி பெற்றார்.