நாடு திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.


இந்திய பிரதமர் மோடி, மகளிர் இந்திய அணியை நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர். 


 



 


மகளிர் அணிக்கு, பிசிசிஐ தலா ரூ.50 லட்சம் வழங்கி கவுரவித்தது. ரெயில்வே துறையில் பணியாற்றும் 10 வீராங்கனைகளுக்கு பதவி உயர்வும், ரூ.13 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. 


மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மோனா மேஷ்ரம், பூனம் ரவுத், மந்தனா ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. 


அதேபோல உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தீபிகா ஷர்மா மற்றும் பூனம் யாதவ் ஆகியோருக்கு நேற்று ஆக்ராவில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.


 



 


மேற்கு வங்கத்தை சேர்ந்த ஃபாஸ்ட் பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமிக்கு கொல்கத்தாவில் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.


 



 


இந்நிலையில் சொந்த ஊர் திரும்பிய மிதாலி ராஜூக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் உற்சாக அளிக்கப்பட்டது. பிறகு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மிதாலி ராஜ்க்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், அடுக்குமாடி குடியிருப்பில் 600 சதுரஅடியில் வீடும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.