கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் கிரான் பொல்லார்ட் 1,000 ரன்களை எட்டவுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

32 வயதான அவர் சர்வதேச டி20 வடிவத்தில், இந்த மைல்கல்லை எட்ட வெறும் 10 ரன்கள் மட்டுமே மீதமுள்ளது. அவர் அந்த இலக்கை அடைய முடிந்தால், பொல்லார்ட் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து குறுகிய வடிவத்தில் 1000 ரன்கள் எடுத்த நான்காவது பேட்ஸ்மேன் என்ற பெருமையினை பெறுவார்.


தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருக்கும் கிறிஸ் கெய்ல் 1,627 சர்வதேச டி20 ரன்களுடன் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். இந்த உயரடுக்கு பட்டியலில் மார்லன் சாமுவேல்ஸ் மற்றும் டுவைன் பிராவோ முறையே 1,611 ரன்கள் மற்றும் 1,142 ரன்களுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் கொல்லார்ட் 1000 ரன்கள் எட்டும் பட்சத்தில் 1000 ரன்களை கடந்த நான்காவது மேற்கிந்திய வீரர் எனும் பெருமையினை பெறுவார்.


முன்னதாக இந்தியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பொல்லார்ட் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட வெறும் 19 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதே நேரத்தில் ஷிம்ரான் ஹெட்மியர் (41 பந்துகளில் 56 ரன்கள்) தனது முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்தார். எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி கண்டது.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய போட்டியில் தோல்வி பெறும் பட்சத்தில் இந்தியா டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.