11 ஆல்ரவுண்டர்கள் இருந்தும் பரிதாப நிலையில் மேற்கிந்திய தீவுகள்!
நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
நேற்று முதல் உலக கோப்பை சூப்பர் 12 அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கியது. துபாயில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அணியில் இருக்கும் 11 வீரர்களுமே ஆல் ரவுண்டர் என்று சொல்லிக்கொண்டு களம் இறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி.
ALSO READ 55 ரன்னில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்! எளிதாக வெற்றி பெற்ற இங்கிலாந்து!
ஐபிஎல்லில் எதிரணியினருக்கு பயத்தை காட்டிய கிறிஸ் கெய்ல், சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், கீரான் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ போன்ற வீரர்கள் அனைவரும் ஒரே அணியில் விளையாடினர். இதனால் இந்த போட்டி சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும் என்று நினைத்து பார்த்த போது, போட்டியின் முடிவு தலைகீழாக மாறியது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தது வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
நேற்றைய போட்டியில் இரட்டை இலக்கத்தில் ரன் அடித்த ஒரே வீரர் கெயில் மட்டுமே. மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனார்கள். 2016ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பையை வென்றது. இதற்கு பலி தீர்க்கும் விதமாக மேற்கிந்திய தீவுகள் அணியை 55 ரன்களில் ஆல் அவுட் செய்தது இங்கிலாந்து. டி20 உலக கோப்பை வரலாற்றில் குறைந்த ரன்கள் அடித்த நாடுகளில் மூன்றாம் இடம் பிடித்தது மேற்கிந்திய தீவுகள். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில் 119 ரன்கள் இலக்கை மிகவும் சிரமப்பட்டு வென்றது ஆஸ்திரேலிய அணி.
ALSO READ INDvsPAK ஆட்டைக்கு ரெடியா! வெற்றி பெற இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR