இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: முதல் ஒரு நாள் போட்டி மழையால் பாதிப்பு!!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரகானே, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.
இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை விடாததால் மீதி ஆட்டம் கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற உள்ளது.
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது..