இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1-0 என்ற முன்னிலையில், 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதின.


டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சையே தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய வீரர் ரஹானேவும், ஷிகர் தவானும் தனது பேட்டிங்கை தொடங்கினர். 


சிகர் தவான் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த யுவராஜ்சிங் 39 ரன்கள் (55 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் நன்றாக நிலைத்து நின்று ஆடிய ரஹானே 72 ரன்களில் (112 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். இதன் பின்னர் டோனியும், கேதர் ஜாதவும் ஜோடி சேர்ந்து இறுதி கட்டத்தில் அதிரடி காட்டினர். 


நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது. டோனி 78 ரன்களுடனும் (79 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேதர் ஜாதவ் 40 ரன்களுடனும் (26 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். 


வெற்றிக்கு 252 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரன்கள் எடுக்க தடுமாறினர்கள். மேற்கிந்திய தீவுகள் அணி 38.1 ஓவரில் 158 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களையும், பாண்டியா 2 விக்கெட்டையும் சாய்த்தனர். 


இதன் மூலம் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.