1 பந்துக்கு 4 ரன்! திரில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள்!
இன்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
உலக கோப்பை 2021 போட்டியில் இன்று பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளே வெல்வதால் இந்த முடிவை எடுத்தது பங்களாதேஷ். இந்த இரண்டு அணிகளுமே கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடின.
இந்த முறை கிறிஸ் கெயில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கினார், இருந்தும் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். மறுபுறம் லீவிஸ்யும் 6 ரன்களுக்கு வெளியேற மேற்கிந்திய தீவுகள் அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஹெட்மயர், பொலார்ட், ரஸ்ல் என அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். சேஸ் நிதானமாக ஆடி 46 பந்துகளில் 39 ரன்கள் அடித்தார். அதிரடியாக விளையாடிய பூரான் 22 பந்துகளில் 4 சிஸ்சர்கள் உட்பட 40 ரன்களை குவித்தார். கடைசியாக இறங்கிய ஹோல்டர் 5 பந்துகளில் 15 ரன்கள் அடிக்க மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் அடித்தது.
எளிய இலக்கை விரட்டிய பங்களாதேஷ் அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடினர். முகமது நசீம் 17 ரன்களும், தாஸ் 43 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர். முஸ்தபிசுர் ரஹ்மான் 8 ரன்களில் வெளியேறினார். எளிதாக வெற்றி பெறவேண்டிய இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொதப்பல் பில்டிங்கினால் கடைசி வரை ஆட்டம் சென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 தேவைப்பட்ட நிலையில் ரஸல் சிறப்பாக பந்து வீசினார். ஒரு பந்துக்கு 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தில் ரன்கள் எடுக்க தவறியது பங்களாதேஷ். இதனால் முக்கியமான இப்போட்டியில் 3 வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி.
ALSO READ ஹர்திக் பாண்டியாவை திருப்பி அனுப்ப BCCI முடிவு.. காப்பாற்றிய MS Dhoni
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR