புதுடெல்லி: ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் மெகா ஏலம், பெங்களூரில் தொடங்குகிறது.  ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகப்பட்சம் 25 வீரர்களையும் அணியில் வைத்திருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று முதல் பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் 2022 மெகா ஏலம் (IPL Mega Auction) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில், பல வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்படலாம். அதிலும் இம்முறை ஏலத்தில் 10 அணிகள் 590 வீரர்களுக்காக சுமார் 561 கோடி செலவழிக்கப் போகின்றன.  


ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று முதல் பெங்களூரில் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலத்தின் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் நேரடி ஒளிபரப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.



இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் புதிய அணிகள் இரண்டு இணைவதால், வழக்கமாக இருக்கும் ரைட்-டு மேட்ச் கார்டு வாய்ப்பு இருக்காது. 


இந்த மெகா ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 30 கிரிக்கெட்டர்கள் இடம்பெற்றுள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே டிராபி தொடர்களில் தமிழ் நாடு அணி சிறப்பாக செயல்பட்டதால், தமிழக வீரர்கள் அதிகத் தொகையில் ஏலம் போகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


மேலும் படிக்க | மும்பை இண்டியன்ஸ் Target செய்யப்போகும் வீரர்கள்


ஏலம் எங்கு நடைபெறும்?
ஐபிஎல் 2022 ஏலம் (ஐபிஎல் மெகா ஏலம் 2022) பெங்களூரில் நடைபெறுகிறது. அனைத்து 10 அணிகளின் உரிமையாளர்களும் அதிகாரிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுப்பார்கள். ஐபிஎல் அணியை சிறப்பாக உருவாக்கும் முயற்சியில் போட்டிகள் பலமாக இருக்கும்.  


ஏலம் எப்போது தொடங்கும்?
ஐபிஎல் 2022க்கான ஏலம் 12 பிப்ரவரி 2022 அன்று இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு தொடங்கும். இம்முறை 590 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் இருப்பார்கள். இம்முறை 19 நாடுகளைச் சேர்ந்த 1214 வீரர்கள் மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 590 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.  



நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
ஐபிஎல் ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு 11 மணிக்கு தொடங்கும் என்றாலும், அது தொடர்பான நிகழ்ச்சிகள் 2 மணி முதல் ஒலிபரப்பாகும். இந்த ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். 


OTT இல் ஏலத்தை நேரடியாக பார்க்கலாம். 
டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஏல ஒலிபரப்பைப் பார்க்கலாம்.  


ALSO READ | IPL Century: சதத்தை தவறவிட்டு 99 ரன்களில் அவுட்டான ஐபிஎல் கிரிக்கெட்டர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR