IPL-லில் தான் அதிக வருமானம் கிடைக்கிறது - ஜேசன் ஹோல்டர் ஓபன் டாக்!
ஐ.பி.எல் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம் என்பதால், நான் உட்பட எந்த வீரரும் மிஸ் செய்ய விரும்புவதில்லை என வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
யூரோ கால்பந்து லீக் தொடருக்கு நிகராக ஐ.பி.எல் (IPL) கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாகை சூடி அசத்தியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 50 ஓவர் உலகக்கோப்பையை பலமுறை வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணிக்கு 20 ஓவர் உலகக்கோப்பை எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால், இந்தமுறை அதனை தவறவிடவில்லை.
அதேநேரத்தில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் (West Indies Cricket Team), உலகக்கோப்பை போட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பு கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக இருக்கும் என கணிக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைக்கும் வகையில் இரு அணிகளும் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறின.
ஆடும் லெவன்ஸை பார்க்கும்போது, தொடரில் பங்கேற்ற அணிகளிலேயே, அதிரடி ஜாம்பவான்கள் நிறைந்த அணியாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ் மட்டுமே. கெயில், ஹெட்மயர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்டு, எவின் லீவிஸ், ஆந்தரே ரஸ்ஸல் என அதிரடி மன்னர்கள் இருந்தாலும், ஒரு அணியாக அவர்கள் இணைந்து விளையாடவில்லை. இதனால், அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறினர்.
ALSO READ | நாட்டை விட ஐபிஎல்லுக்கு வீரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்... கபில்தேவ் ஓபன் டாக்!
20 ஓவர் உலகக்கோப்பை அணியில் முதலில் சேர்க்கப்படாத, ஜேசன் ஹோல்டர் (Jason Holder) தொடரின் இறுதிப் பகுதியில், அதாவது வாழ்வா? சாவா என்கிற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் லெவன்ஸில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவரின் வருகை எதிர்பார்த்தது போலவே அணிக்கு பலமாக இருந்தது.
தற்போது அவர், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், சில கருத்துகளை வெளிப்படையாக பேசியுள்ளார். வீரர்கள் அடுத்தடுத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருப்பது சரியானது அல்ல எனக் கூறியுள்ளார். தேசிய அணிகளில் விளையாடும் வீரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வு தேவை எனக் கூறியுள்ள ஹோல்டர், அதற்கேற்ப தொடர்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வருமானம் குறித்து பேசும்போது, ஐ,பி.எல்லில் தான் அதிக வருமானம் கிடைக்கிறது எனக் கூறியுள்ளார். "என்னைப் போன்ற வீரர்களுக்கு ஐ.பி.எல் மூலம் மிகப்பெரிய வருமானம் கிடைக்கிறது. நிதி ஆதாரமான இந்த லீக் (Indian Premier League) தொடரை விட்டுவிலக வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டும் என்றால், அது மிகவும் கடினம். தேசிய அணிக்கு விளையாட எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனோ, அதேபோல் ஐ.பி.எல் தொடரிலும் ஆடவேண்டும் என விரும்புகிறேன். மற்ற வீரர்களும் இதையே நினைக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
உலகக்கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியபோது, ஐ.பி.எல் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஐ.சி.சி தொடர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக, ஜேசன் ஹோல்டர் தெரிவித்த கருத்து அமைந்துள்ளது.
ALSO READ | இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR