World Cup 2023: கடந்த 5 முறை நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் யார்?
World Cup 2023 Most Runs: உலகக் கோப்பை கொண்டாட்டம் ஆரம்பிக்க உள்ள நிலையில், சில விசியங்களை தெரிந்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். எனவே கடந்த 5 முறை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் யார்? எவ்வாளவு ரன்கள் அடித்தார்கள் என்பதை பார்ப்போம்.
Most Runs In ODI World Cup: உலகக் கோப்பை உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொண்டு விட்டது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக மற்ற நாட்டு அணிகள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை கேப்டன் ரோஹித் வழிநடத்துகிறார். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால், தனது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் முயற்சியில் இந்திய வீரர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 5 முறை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.
சச்சின் டெண்டுல்கர்
தென்னாப்பிரிகாவில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதி தோல்வியடைந்தது. 90’ஸ் கிட்ஸ்களுக்கு இந்த போட்டி கொடுத்த வலியும் வேதனையும் அதிகம் என்றே சொல்லலாம். என்ன தான் கோப்பையை கைப்பற்ற வில்லை என்றாலும், தொடர் நாயகன் விருதை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் பெற்றார். அவர் மொத்தம் ஆடிய 11 இன்னிங்ஸில் 61.18 சராசரியில் 673 ரன்களைக் குவித்தார். இதற்காக அவருக்கு தங்க பேட் விருதும் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க - ஐசிசி உலகக் கோப்பை 2023: டீம் இந்தியா திட்டம் என்ன? இந்த 5 விஷயங்கள் மாறுமா?
மேத்யூ ஹைடன்
இதனை அடுத்து கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியா தான் கோப்பையை வென்றது. இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியதால் பல நட்சத்திர வீரர்களின் வீடுகளில் கிரிக்கெட் ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தொடரில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 73.22 சராசரியுடன் 659 ரன்களை குவித்தார்.
திலகரத்ன தில்ஷான்
தோனி தலைமையிலான யங் இந்தியன் அணி 2011-ம் ஆண்டு 28 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையை வென்று அசத்தியது. இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. அந்த முறை அதிகபட்சமாக இலங்கையின் நட்சத்திர வீரர் தில்ஷன், 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 62.50 பேட்டிங் சராசரியுடன் 500 ரன்கள் விளாசினார்.
மேலும் படிக்க - உலககோப்பை 2023: இந்திய அணியின் கேம்சேஞ்சர் இந்த 3 பேர் தான் - யுவராஜ்
மார்டின் குப்தில்
கடந்த 2011-ம் ஆண்டு கோப்பையை வென்ற குதூகளத்துடன் களமிறங்கிய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லாமல் வெளியேறியது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதி, 5-வது முறையாக உலகக்கோப்பை வென்றது. இந்த முறை அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் 9 இன்னிஸ்களில் விளையாடி 547 ரன்கள் குவித்தார்.
ரோஹித் சர்மா
கடைசியாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி முதல்முறையாக உலக்கக்கோப்பையை வென்றது. இந்த தொடரில் அதிகபட்சமாக இந்திய நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா 5 சதங்கள் உட்பட 648 ரன்கள் குவித்தார். இவர் தான் தற்போது நடக்க உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்துகிறார். மீண்டும் உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - உலக கோப்பை 2023: என்னது மெனுவில் பீப் இல்லையா? பாகிஸ்தான் வீரர்கள் ஷாக்
உலகக் கோப்பை 2023: இந்தியா விளையாடும் போட்டிகளின் பட்டியல்
நாள் | எதிர் அணி | இடம் |
அக்டோபர் 8 | ஆஸ்திரேலியா | சென்னை |
அக்டோபர் 11 | ஆப்கானிஸ்தான் | டெல்லி |
அக்டோபர் 14 | பாகிஸ்தான் | அகமதாபாத் |
அக்டோபர் 19 | பங்களாதேஷ் | புனே |
அக்டோபர் 22 | நியூசிலாந்து | தர்மசாலா |
அக்டோபர் 29 | இங்கிலாந்து | லக்னோ |
நவம்பர் 02 | இலங்கை | மும்பை |
நவம்பர் 5 | தென்னாப்பிரிக்கா | கொல்கத்தா |
நவம்பர் 12 | நெதர்லாந்து | பெங்களூரு |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ