2025-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா?
`பாதுகாப்பு தான் அங்கு சவாலாக இருக்கிறது, கடந்த காலங்களில் அணிகளுக்கு ஏற்பட்ட தாக்குதல் வருத்தமான ஒன்று` என்று இந்தியாவின் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 2025-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த ICC திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை பங்கேற்க இந்திய அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்தியாவின் விளையாட்டு அமைச்சரும், முன்னாள் BCCI தலைவருமான அனுராக் தாக்கூர் இந்த சூழ்நிலை குறித்து டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது , எட்டு அணிகள் பங்கேற்க போகும் இந்த போட்டியில், இந்திய அணியும் கலந்து கொள்ளுமா? என்பது பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்திய அரசு தீவிரமாக கண்காணித்த பிறகு தான் முடிவு செய்யும் என்று கூறினார். மேலும் இதுகுறித்து இந்திய அரசாங்கமும் - உள்துறை அமைச்சகமும் ஏற்கனவே தனது முடிவை எடுத்துள்ளது.
ALSO READ இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!
மேலும் "முந்தைய காலங்களில் கூட, பல நாடுகள் பாகிஸ்தான் சென்று விளையாண்டு இருப்பதை நீங்கள் பார்த்தியிருக்கலாம். அதிலிருந்தே தெரிந்திருக்கும் அங்கு நிலைமை எவ்வளவு மோசம் என்பது, "பாதுகாப்பு தான் அங்கு சவாலாக இருக்கிறது, கடந்த காலங்களில் அணிகளுக்கு ஏற்பட்ட தாக்குதல் வருத்தமான ஒன்று" எனவே, நேரம் வரும்போது சூழ்நிலையைப் பொறுத்து இந்திய அரசு முடிவெடுக்கும்", என்று கூறினார்.
கடந்த 1996-ல் ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்தியதற்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்படும் முதல் ICC போட்டி சாம்பியன்ஸ் டிராபி இது ஆகும். 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பைக்குப் பிறகு எந்த ஒரு இந்திய அணியும் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடவில்லை.
2005 முதல் 2006- வரை ராகுல் டிராவிட் அணி மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட முழு சுற்றுப்பயணத்திற்காக பாகிஸ்தானுக்குச் சென்றதில் இருந்து இரு நாடுகளும் பாகிஸ்தானில் இருதரப்பு கிரிக்கெட்டை விளையாடவில்லை. பாகிஸ்தான் 2007-2008ல் பரஸ்பர சுற்றுப்பயணமாக இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2016 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாதிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது.
ALSO READ அடுத்த ஆண்டு முழுவதும் இந்திய அணி விளையாட உள்ள போட்டி விவரங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR