இந்திய அணி வங்கதேசத்தை வியாழக்கிழமை புனேவில் எதிர்கொள்கிறது. உலகக் கோப்பையில் ஷமி சிறப்பான சாதனை படைத்துள்ளார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உலகக் கோப்பை தொடங்கும் முன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும் உலகக் கோப்பையில் ஷமிக்கு மூன்று போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இந்திய அணி வங்கதேசத்தை வியாழக்கிழமை புனேவில் எதிர்கொள்கிறது. உலகக் கோப்பையில் ஷமி சிறப்பான சாதனை படைத்துள்ளார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையும் மீறி அவர் வெளியில் அமர்ந்துள்ளார். சிராஜ் மற்றும் பும்ரா புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசுகிறார்கள், அதே நேரத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக விளையாடுகிறார். இதனால் ஷமிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சவாலாக உள்ளது. 


மேலும் படிக்க | பந்துவீசும் ரோஹித்... அப்ப இவருக்கு கிடைக்கப்போகுது வாய்ப்பு - சிக்ஸர் மழைக்கு ரெடியா?


சூர்யகுமார் யாதவுக்கும் வாய்ப்பில்லை


ஷர்துல் தாக்கூர் இந்திய அணிக்கு நான்காவது வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். ஸ்பின் டிராக் இருந்தால் ஷர்துலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயர் உடல்தகுதியுடன் சிறப்பாக செயல்படுவதால், சூர்யகுமார் யாதவ் காத்திருக்க வேண்டியுள்ளது. கில் இல்லாத நிலையில், இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்காரராக உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.


எம்எஸ்கே பிரசாத் பாராட்டு


அணி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் தேசிய தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். அஸ்வின், ஷர்துல் ஆகியோர் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டனர். விளையாடும் பதினொன்றில் சிராஜுக்குப் பதிலாக ஷமி இடம் பெறலாம் என்று நினைக்கிறேன். அணி நிர்வாகம் சிராஜுக்கு ஓய்வு கொடுக்க நினைத்தால் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என அவர் கூறியுள்ளார்.


உலகக் கோப்பை; இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்


இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.


வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், தஞ்சீத் ஹசன் தமீம், நஸ்முல் ஹொசைன் சாண்டோ (துணை கேப்டன்), தௌஹீத் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், மெஹ்தி ஹசன் மிராஜ், நசும் அகமது, ஷக் மஹேதி ஹசன், தஸ்தாஃபுர் அஹ்மத் , ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சீம் ஹசன் சாகிப்.


மேலும் படிக்க | தோனியை போல் ரோஹித்... கேப்டன்ஸியில் கெத்து காட்டும் ஹிட்மேன் - 3ஆவது கப் லோடிங்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ