India vs England இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 78 ரன்களில் ஆல் அவுட் ஆகி இக்கட்டான நிலையில் சிக்கியது.  பின்பு ஆடிய இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 423 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.  மேலும் 345 ரன்கள் முன்னிலையிலும் உள்ளது.  இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நான்கு பேரில் மூன்று பேர் அரை சதமும் ஒருவர் சதமும் அடித்துள்ளனர்.  இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20 வருடங்களுக்கு முன் இதே போன்ற ஒரு போட்டியில் டிராவிட் மற்றும் லட்சுமணனின் சிறப்பான ஆட்டத்தினால் வரலாறு காணாத வெற்றி பெற்றது இந்திய அணி.  2001-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்தது.  அதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் பெற்றது. இதனை தொடர்ந்து, மீண்டும் ஆடிய இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.  லட்சுமணன் 281 ரன்களும், ராகுல் டிராவிட் 180 ரன்களும் அடிக்க இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 657 ரன்கள் அடித்தது.  384 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இதன் மூலம் பால் அவன் பெற்ற இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.



தற்போது இந்தியா- இங்கிலாந்து ஆட்டத்தில் இந்திய அணிக்கு இதுபோன்ற ஒரு சிறப்பான பேட்டிங் தேவைப்படுகிறது.  இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி போட்டியை டிரா செய்யும் பட்சத்தில் அல்லது வெற்றி பெற்றாலும் வரலாற்றில் இடம் பிடிக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYe