இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா (IND vs SA)அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் நடைபெற உள்ளது.  நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  டாஸ் வென்று முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் மூன்று விக்கெட்டுக்களை அடுத்தடுத்து தடுமாறியது.  அதன்பின் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் டெம்பா பவுமா கூட்டணி கிட்டத்தட்ட 200 ரன்களுக்கு மேல் சேர்த்து அணிக்கு பெரிதும் உதவியது.  இரண்டு வீரர்களும் சதம் அடிக்க 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | IPL2022: புதிய அணியின் கேப்டன் ஆகிறார் ஹர்திக் பாண்டியா?


அதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான், விராட் கோலி (Virat Kohli)தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியுற்றது.  இறுதியில் ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார், ஆனாலும் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.  இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது ஆறாவதாக ஒரு வீரரை பவுலிங் செய்ய வைக்காமல் இருந்தது.  வெங்கடேச ஐயர்யை ஆல்-ரவுண்டராக அணியில் எடுத்துவிட்டு அவருக்கு கடைசி வரை பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை.  



கிட்டத்தட்ட 30 ஓவர்களாக தென் ஆப்பிரிக்கா வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறிய போதும் கடைசி வரை 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தினார் கேஎல் ராகுல்.  வெங்கடேஷ் ஐயருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்காத பட்சத்தில் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ருத்ராஜ் கெய்குவாடை அணியில் எடுக்கலாம் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இன்றைய 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  



ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இன்றைய போட்டியில் தோல்வியுற்றால் ஒருநாள் தொடரையும் இழக்க நேரிடும், இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது இந்திய அணி.


ALSO READ | சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த விராட் கோலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR